மதுரையைக் கலக்கிய ஸ்டாலின்
மதுரை:
தமிழக முதல்வர் மகனும், சென்னை நகர மேயருமான மு.க.ஸ்டாலின் 500-க்கும் மேற்பட்ட கார்கள் புடைசூழமதுரைக்கு விஜயம் செய்தார்.
வெள்ளிக்கிழமை சமத்துவபுரம் திறப்பு விழா, பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளஸ்டாலின் மதுரை வந்தார்.
அவரை வரவேற்க பெருமளவில் வரவேற்பு வளைவுகள், சாலை முழுவதும் கொடிகள், தோரணங்கள், கருணாநிதி,ஸ்டாலின் உருவ மின் அலங்கார கட்டவுட்டுகளும் வைத்து தி.மு.க.வினர் அமர் களப்படுத்தியிருந்தனர்.
ஸ்டாலினுக்கு பெருங்குடியிலிருந்தே உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் 10அடிக்கு ஒன்ற என்ற விகிதத்தில் சாலை முழுவதும் ஆயிரக்கணக்கான கொடிக் கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன.
முதல்வருக்கு வழங்கும் பாதுகாப்பு போல் ஸ்ாடலினுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. காலை முதலேபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நண்பகல் 12 மணிக்கு 240 கார்கள் பின்தொடர விருதுநகரிலிருந்து பெருங்குடி வந்தார். அங்கு பெருங்கூட்டத்தில்திணறி முன்னேறி பொன். முத்துராமலிங்கம் உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்கள் ஸ்டாலினுக்கு மஞ்சள் துண்டுகொடுத்து வரவேற்றனர்.
முன்னரே இருந்த 240 கார்களுடன் மேலும் 270 கார்கள் சேர்ந்து கொள்ள 500-க்கும் மேற்பட்ட கார்கள் தொடரமதுரை சர்க்யூட் ஹவுசுக்கு சென்றார் ஸ்டாலின். அங்கு அவரை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேலு, போலீஸ்கமிஷனர் ஜாங்கிட் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இந்த கார் ஊர்வலம் 2 மணி நேரம் மதுரை நகரின் வடக்கு பகுதி போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தது. 500-க்கும்மேற்பட்ட கார்கள் சர்க்யூட் ஹவுஸ் பகுதியில் நிறுத்தப்பட்டதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சில தினங்கள் முன்பு ஜெயலலிதா வந்த போது நடந்த ஆடம்பர வரவேற்பால் முகம் சுளித்த மதுரை மக்களுக்குஸ்டாலினின் இந்த மதுரை விஜயத்தால் ஏற்பட்ட கஷ்டம் பெரும் மனக் கசப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications