ஜெ. வழக்கு: டிச.27ல் சாட்சிகள் விசாரணை
சென்னை:
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மீது சுமத்தப்பட்டுள்ள வருமான வரி பாக்கி வழக்கு விசாரணை டிசம்பர்மாதம் 27 ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன், வருமான வரித்துறை உதவி கமிஷனர் சீனிவாசனிடம் இந்த வழக்குகள் குறித்தானசாட்சிகளை நீதிமன்றத்தில் வரும் 27 ம் தேதி சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
1993 ம் ஆண்டு முதல் 1994 ம் வருடம் வரை ஜெயலலிதா தனது சொத்து விவரங்கள் குறித்து வருமானவரித்துறையிடம் முறையான கணக்குகாண்பிக்கவில்லை. வருமான வரியும் கட்டவில்லை. இதையடுத்து இது குறித்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்குஏற்கனவே குற்றப்பத்திரிக்கையும் வழங்கப்பட்டது. இந்த வழக்கு சென்னையிலுள்ள பொருளாதார குற்றத்தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்தார் ஜெயலலிதா. 1996 ம் வருடம் சென்னை உயர்நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்துவழக்கிற்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதற்கிடையே கடந்த நவம்பர் 23 ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் மனுச் செய்தனர். அந்தமனுவில் இந்த வழக்கு கடந்த 4 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வரும் டிசம்பர் 27 ம் தேதி சாட்சியங்கள் விசாரிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யுங்கள் என்றுவருமானவரித்துறை அதிகாரி சீனிவாசனுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வருமானவரித்துறை அதிகாரிகள் கொடுத்த தகவல்படி 1993-94 ம் வருடங்களில் ஜெயலலிதாவின் ஆண்டு வருமானம் ரூ 1.04 கோடி. வருமான வரிவட்டியுடன் சேர்த்து ரூ 98 லட்சமாகும்.
யு.என்.ஐ.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications