அரசு மரியாதையுடன் படேல் உடல் அடக்கம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

மறைந்த கர்நாடக முதல்வர் ஜே.எச்.படேலின் உடல் அவரது சொந்த ஊரான தாவண்கரே மாவட்டத்திலுள்ள காரிகனூரில் முழு அரசு மரியாதையுடன்புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

கல்லீரல் பாதிப்பு மற்றும் முதுகு வலி காரணமாக பெங்களூர் மணிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர்படேல் செவ்வாய்க்கிழமை அதிகாலை மரணமடைந்தார்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு பெங்களூரிலுள்ள படேலின் மகன் வீட்டிலிருந்து அவரது உடல் காரிகனூருக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் படேலின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பெங்களூரிலிருந்து முதல்வர் கிருஷ்ணா தனி ஹெலிகாப்டரிலும், மத்திய அமைச்சர்கள் தனி ஹெலிகாப்டரிலும் காரிகனூர் சென்று படேல் உடலுக்கு மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இறுதிச் சடங்கு:

காரிகனூர் பண்ணைத் தோட்டத்தில் உள்ள படேலின் தந்தை ஹாலப்ப படேலின் சமாதி பக்கத்தில் படேல் உடல் வைக்கப்பட்டு லிங்காயத்து முறைப்படி இறுதிச்சடங்கு நடந்தது.

இறுதிச் சடங்கில் படேலின் மனைவி சர்வமங்களா, 3 மகன்கள், முன்னாள் கர்நாடக முதல்வர்கள் ராமகிருஷ்ண ஹெக்டே, எஸ்.ஆர்.பொம்மை, பங்காரப்பாமற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படேலின் இறுதிச் சடங்கு நடந்ததால் புதன்கிழமை தாவண்கரேயில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+