தெ.ஆப்பிரிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
ஜோஹன்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்காவிலிருந்து, இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைஅதிகரித்து வருவதாக துபாயிலிருந்து செயல்பட்டு வரும் மேற்கு ஆசியா மற்றும்ஆப்பிரிக்காவிற்கான பிராந்திய இந்திய சுற்றுலா இயக்குநர் கெளர் கஞ்சிலால்கூறியுள்ளார்.
கஞ்சிலால் ஜோஹன்னஸ்பர்க் நகரில் கூறுகையில், தென்ஆப்பிரிக்காவிலிருந்துஇந்தியா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 15 சதவீதம்அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
கடந்த ஆண்டு 24,000 தென் ஆப்பிரிக்கர்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தனர்.அவர்கள் தவிர, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் டச்சு நாடுகளைச் சேர்ந்தவர்களும்இந்தியா வந்திருந்தனர்.
வரும் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து, இந்தியா வரும் சுற்றுலா பயணிகளின்எண்ணிக்கை 15 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.
நிறவெறி காரணமாக, முன்பு தென் ஆப்பிரிக்காவின் வெள்ளையர் ஆதிக்கபகுதிகளிலிருந்து, இந்தியாவுக்குச் செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால்1990-க்குப் பிறகு இந்த நிலை வெகுவாக மாறி விட்டது.
இந்தியா குறித்தும், இந்தியர்கள் குறித்தும் நாங்கள் மேற்கொண்ட பிரசாரத்துக்கு நல்லபலன் கிடைத்துள்ளது. இதையடுத்து இந்தியாவுக்கு வருவோரின் எண்ணிக்கைகுறிப்பிடத்தக்க வகையில் மாறியுள்ளது என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.


Click it and Unblock the Notifications
