மைதாவுக்குள் சாராயம் .. வற்றலுக்குள் கஞ்சா
சென்னை:
மைதா மாவு மூட்டைக்குள் 1000 சாராய பாக்கெட்டுகளும், மிளகாய் வற்றல் மூட்டைக்குள் 250 கிலோ கஞ்சாவும் கடத்திய 10 பேரைபோலீசார் கைது செய்தனர்.
கைதானவர்களிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள சாராய பாக்கெட்டுகள், கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரிகளையும் போலீசார் பறிமுதல்செய்தனர்.
தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சுவோர், விற்போர் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து மதுபானம் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்ககாவல் துறை கூடுதல் டி.ஜி.பி. அலெக்சாண்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
தர்மபுரி மாவட்டம் ஓசூர் - மாலூர் நெடுஞ்சாலையில் மதுவிலக்கு போலீசார், வேகமாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 12 சாக்குமூட்டைகளில் 1000 கர்நாடக சாராய பாக்கெட்டுகள் மைதா மாவுக்குள் மறைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக லாரி டிரைவர் வெங்கடேசன், பாண்டியன், ராமர் மாடசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் இன்னொரு லாரியை நிறுத்தி சோதனையிடப்பட்டது. அதில் 10 சாக்கு மூட்டைகளில் மிளகாய் வற்றல் இருந்தது. அதற்குள் 250 கிலோகஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரிந்தது.
இதுதொடர்பாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி டிரைவர் ராஜேந்திரன் (40), மது (30), செங்கோடன் (46), தாமு (20)ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
-
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications