காளிமுத்துவைப் பார்த்தார் ஸ்டாலின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் காளிமுத்து நேரில் சந்தித்துஉடல்நிலை குறித்து சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார்.

அ.தி.மு.க அவைத் தலைவர் காளிமுத்து மாரடைப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை நகர மேயர் மு.க ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காலை அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றார். அங்குசிகிச்சை பெற்று வரும் காளிமுத்து உடல் நிலை பற்றி அவரது துணைவியாரிடம் விசாரித்தார்.

ஸ்டாலினுடன், அமைச்சர் பொன்முடி, செ.குப்புசாமி எம்.பி, பெருமாள், எம்.பி.சுப்பிரமணியம் ஆகியோர்சென்றிருந்தனர்.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்சங்கரய்யாவையும் ஸ்டாலின் நேரில் பார்த்து உடல் நலம் விசாரித்தார்.

தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கம்யூனிஸ்ட் தலைவர் கே.டி.கேதங்கமணியையும் ஸ்டாலின் நேரில் பார்த்து உடல் நலம் விசாரித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற