அசாம் தீவிரவாதிகளை அடக்கத் தயார் .. கே.பி.எஸ். கில்
குவஹாத்தி:
அசாமில், தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட அழைத்தால் செல்லத் தயார்என்று பஞ்சாப் மாநில முன்னாள் டி.ஜி.பி. கே.பி.எஸ். கில் கூறியுள்ளார்.
இந்தியா அப்ராட் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் இவ்வாறுதெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் தீவிரவாதத்தை அடியோடு ஒழித்ததில் முக்கியப் பங்காற்றியவர்கே.பி.எஸ். கில். சமீபத்தில், விடுதலைப் புலிகளை அடக்குவது தொடர்பாக கில்லைஅழைத்து ஆலோசனை கேட்டது இலங்கை என்பது நினைவிருக்கலாம்.
பேட்டியில் கில் கூறுகிறார் ...
தீவிரவாதத்தை ஒழிக்க எனது சேவை தேவை என்று அசாம் மாநில அரசு கருதிஎன்னை அழைத்தால், நிச்சயம் அதை ஏற்றுக் கொள்வேன். கடந்த பல ஆண்டுகளகதீவிரவாதிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளேன்.எனவே, அசாமுக்கு நான் அழைக்கப்பட்டால், முழு விருப்பத்துடன் அங்கு செல்லத்தயாராக உள்ளேன்.
அசாமில் தீவிரவாதிகளை கையாள, அந்தப் பகுதிக்கேற்ற உத்திகள் எடுக்கப்படவேண்டும். அசாமில் பல பகுதிகளில் தீவிரவாதிகள் சரண் அடைந்து வருகிறார்கள.இதனால், தீவிரவாதிகளின் கை தாழ்ந்து வருகிறது என்று யாரும் நினைத்து விடக்கூடாது என்பதற்காகவே, சமீப காலமாக அதிக அளவில் தாக்குதல் நடவடிக்கையில்அசாம் தீவிரவாதிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
அசாம் போலீஸ் படை, தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்குப் போதுமான பலத்துடன்உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துடன் ஒப்பிடுகையில், அசாசமில், அதிக அளவிலானதீவிரவாதிகள் இல்லை. எனவே ராணுவத்தை அங்கு வரவழைக்க வேண்டும் என்றஅவசியமில்லை.
உள்ளூர் போலீஸாருக்கு அதிக அதிகாரமும், ஆயுத பலமும் அளிக்கப்பட வேண்டும்.இதுதவிர, அவர்களுக்கு அதி நவீன ஆயுதங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் வழங்கவேண்டும்.
பஞ்சாபில் தீவிரவாதிகளை எதிர்கொள்ள கிராமத்து மக்களுக்கு ஆயுதங்கள்வழங்கப்பட்டன. இது எதிர்பார்த்த பலனைத் தந்தது. ஆனால் அதே போல, அசாமில்செய்வதற்கு முன்பு, விரிவாக ஆலோசிக்கப்பட வேண்டும் என்றார் கில்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications