அசாருதீன் சொத்து முடக்கப்படுமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேட்ச் பிக்ஸிங்கில் புகார் கூறப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள் அசாருதீன், ஜடேஜா,மனோஜ் பிரபாகர் ஆகியோரின் சொத்துக்களை முடக்குவது குறித்து பரிசீலித்து வருவதாகமத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உமா பாரதி கூறினார்.
திருப்பதி செல்லும் வழியில், சனிக்கிழமை சென்னைக்கு வந்திருந்த அவர்செய்தியாளர்களிடம் கூறுகையில், வருமான வரித்துறை அதிகாரிகளிடமிருந்து அறிக்கைவந்த பிறகு இதுகுறித்து முடிவு செய்யப்படும்.
இந்த வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட அர்ஜூனா விருதைத் திரும்பப் பெறுவது என்றமுடிவு, அவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனை கிடையாது. அவர்களைஅவமானப்படுத்துவதற்குச் சமம்.
இதுதொடர்பாக 15 நாட்களுக்குள் பதில் தர வேண்டும் என்று அவர்களுக்கு கெடுவிதிக்கப்பட்டுள்ளது என்றார் பாரதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications