ரூ. 10 கோடி சட்டவிரோத சாப்ட்வேர் பறிமுதல்
சென்னை:
பன்னாட்டு நிறுவனங்களிடம் உரிமம் பெறாமல் கம்ப்யூட்டர் பாடம் நடத்தும் நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ந்துபடிக்க வேண்டாம் என்று சென்னை நகர போலீஸ் கமிஷ்னர் காளிமுத்து எச்சரித்துள்ளார்.
ஆரக்கிள் நிறுவனத்திடம் உரிமம் பெறாமல் அந்நிறுவனத்தின் சாப்ட்வேரை பயன்படுத்தி சென்னையில் உள்ளரேடியன்ட் கம்ப்யூட்டர் நிறுவனம் பாடம் நடத்தி வந்ததாக புகார் கொடுக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் சென்னை நகர போலீஸார் ரேடியன்ட் நிறுவனங்களில் ரெய்டு நடத்தி பத்து கோடி ரூபாய்மதிப்புள்ள கம்ப்யூட்டர் சாப்ட்வேர்கள், சி.டிக்களை பறிமுதல் செய்தனர்.
இவற்றை வெள்ளிக்கிழமை சென்னை நகர போலீஸ் கமிஷனர் காளிமுத்து பார்வையிட்டார்.
பின்னர் கமிஷனர் காளிமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:
பன்னாட்டு நிறுவனங்களிடம் உரிமம் பெறாமல் அந்த நிறுவனத்தின் சாப்ட்வேர்களை நகல் எடுத்து கம்ப்யூட்டர்கல்வி நிறுவனங்கள் பாடம் நடத்தி வருவதாக மும்பையில் உள்ள அதிகாரிகள் என்னை சந்தித்து புகார்கொடுத்தனர்.
அதன் பேரில் திருவல்லிக்கேனி போலீஸ் துணை கமிஷனர்
சந்திரசேகரன், பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் ஷகில் அக்தர், எழும்பூர் உதவி கமிஷனர் மாணிக்கம்,இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை விசாரணையில் இறங்கியது.
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை மற்றும் பாரிமுனை லிங்கிச் செட்டித் தெருவில் உள்ள ரேடியண்ட் கம்ப்யூட்டர்நிறுவனத்தில் போலீஸார் சோதனை நடத்தினர். இதில் ஆரக்கிள் நிறுவனத்தின் உரிமம் பெறாமல் அதன் சாப்ட்வேர்பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து 62 கம்ப்யூட்டர்கள், 64 ஆரக்கிள் சி.டிக்கள், ஐந்து கலர் டி.விகள், மற்றும் சாப்ட்வேர் புத்தகங்கள்பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு பத்து கோடிரூபாயாகும் என்று ஆரக்கிள் சாப்ட்வேர் நிறுவனத்தின் இந்தியஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.
அனுமதி பெறாமல் சாப்ட்வேர் பயன்படுத்திய குற்றத்திற்காக நுங்கம்பாக்கம் மைய மேலாளர் பாபு,லிங்கிச்செட்டித்தெரு மைய மேலாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டனர்.
ஆரக்கிள், ஜாவா போன்ற படிப்புகளை, அனுமதியின்றி நடத்தும் சாப்ட்வேர் நிறுவனங்களில் சேர்ந்து மாணவர்கள்ஏமாற வேண்டாம் என்று கமிஷனர் கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட மோசடிகள் பெங்களூர், மும்பை நகரங்களிலும் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications