கிறிஸ்துமஸ்: முதல்வர், கவர்னர் வாழ்த்து
சென்னை:
திங்கள்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதையடுத்து தமிழக முதல்வர் கருணாநிதி, கவர்னர் பாத்திமா பீவி ஆகியோர் பொதுமக்களுக்கு வாழ்த்துதெரிவித்துள்ளனர்.
கவர்னர் வாழ்த்துச் செய்தி:
கவர்னர் பாத்திமா பீவி தனது வாழ்த்துச் செய்தியில், இந்தக் கிறிஸ்துமஸ் நன்னாளில் நாடு முழுவதும் அமைதியும், தேச ஒற்றுமையும் ஏற்பட வேண்டும்.மகிழ்ச்சியான இந்த கிறிஸ்துமஸ் திருநாளில் விழா கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது உள்ளம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் வாழ்த்து:
ஏசு பிரான் தன் மேல் சுமத்தப்பட்ட பழிகளையும், குற்றங்களையும் அமைதியாக ஏற்றுக் கொண்டு, பொறுமை காத்து சிலுவை சுமந்தார். அவருக்குச்சிறப்புச் செய்யும் வகையில் இந்தக் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்படுகிறது.
நாமும் ஏசுபிரான் போல் நீண்ட பொறுமை காத்து, நாடு முன்னேறப் பாடுபட வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, நட்புணர்வுடன் பழகவேண்டும். அன்பு, தியானம், பொறுமை ஆகியவற்றை நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். மன்னிக்கும் மனப்பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன் என்று தனது வாழ்த்துச் செய்தியில்குறிப்பிட்டுள்ளார் முதல்வர்.
முன்னதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எம்.ஜி.ஆர்.கழகத் தலைவர் ராம வீரப்பன் ஆகியோர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications