புதுவையில் எம்.ஜி.ஆருக்கு நினைவஞ்சலி
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.நினைவுதினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுவதையடுத்தது புதுவையில் அவருக்கு நினைவஞ்சலிசெலுத்தப்பட்டது.
பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம், சுற்றுலாத்துறை அமைச்சர் ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினர்.
அதிமுக சார்பில் மாநில செயலாளர் ரவீந்திரன் தலைமையில் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி அமைதி ஊர்வலம் நடந்தது. பின்னர் அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் எம்ஜிஆர் சிலைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
திமுக, அதிமுக, திராவிடக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications