வா.மு.சேதுராமனுக்கு வள்ளுவர் விருது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முனைவர் வா.மு.சேதுராமனுக்கு 2000 மாவது ஆண்டிற்கான தமிழக அரசின் திருவள்ளுவர் விருது வழங்கப்படுகிறது.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், 2000 மாவது ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதிற்கு வா.மு.சேதுராமன்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவ்விருதுக்கான ஒரு லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள பொற்கிழி, பொற்பதக்கம் ஆகியவை ஜனவரி 15 ம் தேதி சென்னையில் நடக்கும் திருவள்ளுவர்தின விழாவில் முதல்வர் கருணாநிதியால் வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் நிறுவனர் மற்றும் உலக அமைப்பாளராக வா.மு.சேதுராமன் தொண்டாற்றி வருகிறார்.












Click it and Unblock the Notifications