ரித்திக் குழப்பம்: நேபாள துப்பாக்கி சூட்டில் 4 மாணவர்கள் சாவு
காத்மாண்டு:
இந்தி நடிகர் ரித்திக் ரோஷன் நேபாள மக்களை அவமானப்படுத்தியதாக கூறப்பட்டகுற்றச்சாட்டை எதிர்த்து தலைநகர் காத்மாண்டுவில் நடந்த மாணவர் போராட்டத்தில்போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் இறந்தனர்.
தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், தான் நேபாள நாட்டையும், நேபாள மக்களையும்வெறுப்பதாக ரித்திக் ரோஷன் கூறியதாக நேபாளம் முழுவதும் செய்தி பரவியது. இதைஎதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நேபாளத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பைராத்நகரில் துவங்கியது. பின்னர் நாடு முழுவதும் பரவியது. போராட்டத்தை தடுக்கபோலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முழுவதும் அமைதி நிலவியது. இருப்பினும்செவ்வாய்க்கிழமை நேபாளம் முழுவதும் 12 இடங்களில் மாணவர்கள் போராட்டம்நடத்தினர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களில்ஒருவர் 13 வயது பெண். இவர் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த போது பாயந்துவந்த துப்பாக்கி குண்டுக்கு இறந்து போனார் என்றார்.
இதற்கிடையே, நேபாளத்தையும், அந்நாட்டு மக்களையும் அவமானப்படுத்தும்விதத்தில் தான் எந்த பேட்டியிலும் கூறவில்லை என ரித்திக் ரோஷன் மறுப்புதெரிவித்துள்ளார்.
நேபாள தலைநகரில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அனைத்து இந்தி சானல்களின்ஒளிபரப்பையும் நிறுத்தி வைத்துள்ளனர். இது குறித்து பிரபல கேபிள் டிவிஉரிமையாளர் நீர்ஷா கூறுகையில், எங்களை யாரும் இந்தி சானல் ஒளிபரப்பைநிறுத்துமாறு கூறவில்லை. ரித்திக் ரோஷன் கூறிய கருத்தை எதிர்த்து நாங்களாகவேஎடுத்த நடவடிக்கைதான் இது என்றார்.












Click it and Unblock the Notifications