யாரிடமும் கையேந்த மாட்டோம் .. கூறுகிறது பா.ம.க
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் சீட்டுக்காக யாரிடமும் கையேந்தி நிற்க மாட்டோம் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டைத் தொகுதியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தயவு இல்லாமல் யாரும்தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாது. 98 ம் ஆண்டு 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடத்தைக் கைப்பற்றினோம்.
கட்சியைக் கரை சேருங்கள் என்று யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியம் பா.ம.க.வுக்கு இல்லை. இன்று தமிழகத்திலுள்ள மிகப்பெரிய கட்சிகளில்பா.ம.க.வும் ஒன்று.
காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்டுவதுதான் எங்கள் குறிக்கோள் என்று கூறிய கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் இன்று காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிவைத்துக் கொண்டுள்ளனர்.
தற்போதைய அரசியலில் யார் எங்கே? எப்போது காணாமல் போவார்கள்? என்பது புரியாத புதிராக உள்ளது. அரசியல்வாதிகளின் ஒரே நோக்கம்அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான்.
மற்ற கட்சித் தலைவர்களைத் திட்டுவது பாட்டாளி மக்கள் கட்சியின் வேலையல்ல. பாட்டாளி மக்கள் கட்சி 1989 ம் ஆண்டு பத்து லட்சம் மக்களைக்கூட்டி வந்து தொடங்கப்பட்டது. மக்களுக்கு சேவை செய்வதே எங்களின் நோக்கம் என்றார் ராமதாஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications