தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வு இல்லை, நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
ஊட்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பொன்முடி கூறியதாவது:
அரசு போக்குவரத்துக் கழக பஸ்களை இயக்குவது குறித்த இரண்டு நாள் ஆய்வு கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது. இதில்கோவை மாவட்டத்தில் 24 வழித் தடங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை.
நீலகிரியில் 48 வழித் தடங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை. இவை இந்த மாத இறுதிக்குள் இயக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மேலும்,மசினகுடி வழியாக மைசூருக்கு பஸ் விடப்படும். ஊட்டியில் புதிய அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் அமைக்கப்படும். தமிழகத்தில் பஸ் கட்டணத்தைஉயர்த்தும் எண்ணம் தற்போது அரசுக்கு இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications