எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்ய தயார்: கண்ணன்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 3 எம்.எல் ஏ.க்களின் பதவியை பறித்து, சபாநாயகர் பிறப்பித்தஉத்தரவு செல்லாது என நீதிமன்றம் அறிவிக்காவிட்டால் எனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்வேன் எனபாண்டிச்சேரியின் முன்னாள் அமைச்சர் கண்ணன் கூறியுள்ளார்.
இது பற்றி கண்ணன் புதன்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாண்டிச்சேரியில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவி பறிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மனோகர், ராஜசேகரஉடையார், ஏழுமலை ஆகியோர் மீது சபாநாயகர் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்துன்ளனர்.
இந்த மனு மீது வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. பாண்டிச்சேரி அரசு அவகாசம் கேட்டதால் விசாரணைஒத்தி வைக்கப்பட்டது.
நீதிமன்றம் சபாநாயகர் உத்தரவுக்கு தடை விதிக்காவிட்டால் தார்மீக பொறுப்பேற்று நான் ராஜினாமா செய்வேன்.
பாண்டிச்சேரியில் சாராய ஆலை உரிமத்தை தனியாருக்கு உரிமம் வழங்குவதில் கோடிக்கணக்கான பேரம்பேசப்பட்டுள்ளது அதை பங்கு பிரிக்கும் வேலையும் நடந்து வருகிறது.
தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் சாராய உரிமம் வாங்க வேண்டியதன் அவசரம் என்ன? பல பணிகள்உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன. அவற்றில் அரசு கவனம் செலுத்தாதது ஏன்? சாராயதொழிற்சாலைக்கு உரிமம் வழங்கினால் நான் சி.பி.ஐ. விசாரணை கோருவேன் என கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications