ஜன.7 ல் வியட்நாம் செல்கிறார் வாஜ்பாய்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் ஜனவரி 7 ம் தேதி முதல் 10 ம் தேதி வரை நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக வியட்நாம் மற்றும் இந்தோனேசியா செல்கிறார்.
இந்தியாவுக்கும், இந்தோனேசியா மற்றும் வியட்நாமுக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த சுற்றுப்பயணம் இருக்கும் என்றுவெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு வியட்நாமுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல்முறை. அதே போல் கடந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகுஇந்தியப் பிரதமர், இந்தோனேசியா செல்கிறார்.
முன்னதாக 1999 ம் வருடம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ஆகியோர் வியட்நாமுக்குச்சென்றனர்.
தற்போது பிரதமர் வாஜ்பாயின், வியட்நாம் மற்றும் இந்தோனேசிய சுற்றுப்பயணம் சம்பந்தப்பட்ட நாடுகளின் உறவை மேம்படுத்தும் வகையில்இருக்கும்.
பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், கல்வி, அறிவியல் துறைகளில் இரு நாடுகளுடனும் எவ்வாறு இணைந்து செயல்படுவது என்பதுகுறித்து பிரதமரின் இந்த சுற்றுப்பயணத்தின் போது விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வியட்நாமில் பிரதமர் வாஜ்பாய், வியட்நாம் பிரதமர் பான் வான் கைய், தலைவர் டிரான், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர்ஆகியோரைச் சந்தித்துப் பேசுவார்.
மேலும் வியட்நாம் சுற்றுப்பயணத்தின் போது, பாதுகாப்பு, அறிவியல், தகவல்தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியாவும், வியட்நாமும்இணைந்து செயல்படுவது குறித்தான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications