தாக்குதலால் 10 லட்சம் நஷ்டம்.. கூறுகிறார் கிருஷ்ணசாமி
சென்னை:
சென்னையில் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதில் ரூ 10 லட்சம் பெறுமானமுள்ள பொருட்கள் நஷ்டமடைந்தது என புதிய தமிழகம் கட்சித் தலைவர்கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
சென்னையில் நான் குடியிருக்கும் வீடு வாடகை வீடுதான். கட்சி அலுவலகம் என்று தனியாக வைத்து நடத்தக் கூடிய அளவுக்கு என்னிடம் வசதி கிடையாது.அதனால்தான் என் வீட்டையே அலுவலகமாக நடத்தி வருகிறேன்.
நான் மதுரைக்குச் சென்றிருந்த நேரம் பார்த்து 60 க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் ஒருஉயர் போலீஸ் அதிகாரி இருக்கிறார். அது எனக்குத் தெரியும்.
எங்கள் அலுவலகத்துக்கு வந்து பேக்ஸ் மெஷின், கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் மிஷின், டெலிபோன் ஆகியவற்றை சேதப்படுத்தி விட்டுப் போய் விட்டார்கள்.கட்சிப்பணம் ரூ 2 லட்சத்தையும் திருடிச் சென்று விட்டார்கள். இந்தத் தாக்குதலில் ரூ 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரியை உடனடியாக நீக்கக் கோரி மாவட்டக் கலெக்டர் அலுவலம் முன் வரும் ஜனவரி 11 ம் தேதிபுதிய தமிழகம் கட்சி சார்பில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார் கிருஷ்ணசாமி.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications