கருணாநிதியின் முடிவுகளை பாஜக ஏற்கும்
வேலூர்:
தமிழக சட்டசபைத் தேர்தலில் முதல்வர் கருணாநிதி எடுக்கும் முடிவுகளை பாரதிய ஜனதா ஏற்றுக் கொள்ளும் என்றுதமிழக பாரதிய ஜனதா கட்சி பொதுச்செயலாளர் இல.கணேசன் தெரிவித்தார்.
இதுகுறித்து வேலூரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் மத்தியில் நல்லாட்சி நடந்து வருகிறது. இதற்கு தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க ஆகியகட்சிகள் நல்லாதரவு அளித்து வருகின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைய வேண்டும். தமிழகத்தில் தமிழக ராஜீவ்காங்கிரஸ் கட்சிக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலைதொடரக் கூடாது. அவர்களுக்கு இடையே உள்ள பிரச்சனையை முதல்வர் கருணாநிதி தலையிட்டு தீர்த்து வைக்கவேண்டும். த.ரா.க.வும், பா.ம.கவும் தேசிய ஜனநாயகக் கட்சியில் நீடிக்க வேண்டும்.
அயோத்தி விவகாரத்தில் பிரதமர் வாஜ்பாய் கூறிய கருத்துக்களை திசை திருப்பி கூட்டணிக்குள் தகராறு ஏற்படுத்தஎதிர்க்கட்சியினர் முயன்றனர். ஆனால் எதிர்க் கட்சிகளின் செயலை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் நடந்துகொண்டனர் கூட்டணிக் கட்சியினர்.
பாபர் மசூதி விவகாரம், ராமர் கோவில் விவகாரம் குறித்து இரு அமைப்புக்களின் தலைவர்களும் அமைதியாகப்பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.
வரும் சட்டசபைத் தேர்தலில் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்என்பதையே தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்புகிறது. படித்தவர்கள் வாக்காளர் அடையாள அட்டைபெறுவதில் அதிக ஆர்வம் காட்டாதது வருத்தமளிக்கிறது என்றார் இல.கணேசன்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications