கோவையில் கேட்டவுடன் டிரிங்.. டிரிங் இணைப்பு
கோவை:
கோவையில் கேட்டவுடன் டெலிபோன் இணைப்புக்கள் கொடுக்கப்படும் என்று கோவை எம்.பி. ராதாகிருஷ்ணன்தெரிவித்துள்ளார்.
கோவை எம்.பி ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கோவையில் காஸ் இணைப்புகள் கேட்டவுடன் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதே போன்றுஅடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனைத்து டெலிபோன் இணைப்புகளும் வழங்கப்பட்டு, கேட்டவுடன்டெலிபோன் இணைப்பு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். இன்னும் ஓராண்டில்கோவையில் டெலிபோன் இணைப்புகள் கேட்டவுடன் கிடைக்கும்.
துபாயிலிருந்து இந்தியா வரையில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக ஆப்டிகல் பைபர் பதிக்கப்படுகிறது. இந்தஆப்டிகல் பைபர் லைனை கோவை வரை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். தமிழகத்தில் சென்னைக்குஅடுத்தபடியாக கோவை தான் தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் முன்னணி வகித்து வருகிறது. கோவையிலிருந்துதான் அதிக கம்ப்யூட்டர் நிபுணர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.
இங்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சென்னையில் டைடல் பார்க் போன்றே ஒரு புதிய கம்ப்யூட்டர் தகவல்தொழில்நுட்ப மையம் நிறுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் தொழில்நுட்ப மையத்திற்குதுபாய் இணைப்பு கிடைத்தால் கோவையில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி நன்றாக இருக்கும்.
ஐரோப்பிய யூனியனுடன் சமீபத்தில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி 3000 டன் துணிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிகிடைத்துள்ளது. இதனால் திருப்பூருக்கு தேவையான அளவு ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிக்கும்.
சமீபத்தில் தைவான் நாட்டிற்குச் சென்றிருந்தேன். சிறிய நாடாக இருந்தாலும், பொருளாதார நடவடிக்கைகளில்முன்னேறிய நாடாக இருந்து வருகிறது. இந்த நாட்டின் அந்நிய நாட்டுக் கையிருப்பு 150 பில்லியன் டாலராகஇருப்பது வியத்தகு விஷயமாகும்.
இந்த நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், ஆண்டுக்கு 5 மில்லியன் டாலர் இந்தியாவில் முதலீடாகவந்து சேர வாய்ப்பு உள்ளது. இதற்கான ஒப்பந்த வரைவு தாயாரிக்கப்பட்டு வருகிறது.
விரைவில் கோவையிலிருந்து சென்னை வழியாக கோல்கத்தாவிற்கு விமானப் போக்குவரத்து துவங்கப்படஉள்ளது. இதே போன்று பொங்களூர் வழியாக டெல்லிக்கும் விமானப் போக்குவரத்து தொடங்கப்படும்.
அடுத்து வரும் பட்ஜெட்டில் டெக்ஸ்டைல் தொழிற்சாலைக்கு பருத்தி இறக்குமதிக்கான கலால் வரியான 5சதவீதத்தை நீக்கும்படி வலியுறுத்தவுள்ளேன். கோவையில் நடந்து வரும் இருகூர் ரயில்பாதை இரட்டிப்பணிஅடுத்த ஆண்டு டிசம்பருக்குள் முடிவுக்கு வரும் என்றார் ராதாகிருஷ்ணன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications