தோட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை.. அரசு
சென்னை:
திருநெல்வேலி மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காத காரணத்தால் மாஞ்சோலை எஸ்டேட் உரிமையாளர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் 1999 ம் ஆண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தினார்கள். அவர்களதுகோரிக்கைகளில் முக்கியமான ஒன்று சம்பளம் கொடுக்காதது ஆகும். இதையடுத்து அவர்கள் போராட்டம் நடத்திய போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
முன்னதாக 3 வருடங்கள் சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்து வரும் மாஞ்சோலை எஸ்டேட் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னதாக தமிழக அரசு உயர் மட்டக் குழுவினர் கூடி விவாதித்து மாஞ்சோலை எஸ்டேட் உரிமையாளர்கள் மீது நடவடிக்கைஎடுப்பது குறித்து விவாதித்தனர்.
கடந்த இரண்டு வருடங்களாக மாஞ்சோலை எஸ்டேட் ஊழியர்கள் தேயிலை உற்பத்தி செய்யாமல் உள்ளனர். இதனால் ஏராளமான மக்களுக்குவேலைவாய்ப்பு இல்லை. இப்பிரச்சனையில் அரசு தலையிட்டதால் தேயிலை உற்பத்தியை மாஞ்சோலை உரிமையாளர்கள் மீண்டும் தொடங்கியுள்ளனர். சிலதொழிலாளர்கள் மட்டும் வேலைக்கு வந்துள்ளனர்.
மேலும் அரசு வற்புறுத்தலின்படி ஊழியர்களுக்கு சம்பள பாக்கியைக் கொடுப்பதாக மாஞ்சோலை தோட்ட உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டனர்.இருப்பினும் அவர்கள் சம்பள பாக்கியைக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ராஜ்குமாரைக் கடத்திய வீரப்பன், அவரை விடுவிக்க வேண்டுமானால் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போதுஉயிரிழந்தவர்கள் 14 பேரின் குடும்பத்துக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications