பெரும் மோதலுக்குத் தயாராகும் விடுதலைப் புலிகள், ராணுவம்
கொழும்பு:
இலங்கை ராணுவமும், விடுதலை புலிகளும் பெரும் சண்டைக்காக தங்களை தயார்செய்து கொண்டுள்ளன.
நார்வே குழுவினர் அமைதிப் பேச்சு வார்த்தையை எப்போது துவங்குவது என்பதில்எந்த முடிவும் எடுக்க முடியாமல் திரும்பியுள்ள நிலையில் இலங்கை ராணுவமும்,புலிகளும் சண்டைக்காக தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டுள்ளனர்.
நார்வேயின் சிறப்பு தூதர் எரிக் சோல்ஹெம் 3 நாள் பயணமாக கொழும்புவந்திருந்தாதர். இவர் வெள்ளிக்கிழமை கொழும்புவிலிருந்து கிளம்பி சென்றார்.ஆனால் எப்போது இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் அமைதிப் பேச்சுவாரத்தையை தொடங்குவது என்பது குறித்து எந்த விதமான முடிவும் எடுக்கப்படாதநிலையில் தோல்வியுடனே சென்றுள்ளார்.
இவர் லண்டனில் இருக்கும் விடுதலைப்புலிகளின் தலைமையத்திற்கு சென்று,இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவுடனும் மற்றும் அரசு அதிகாரிகளுடனும்,எதிர்கட்சியினருடனும் தான் நடத்திய பேச்சு வார்த்தை குறித்து விவரிப்பார் எனதெரிகிறது.
பாதுகாப்புப் படை வீரர்கள் மிக்-27 போர் விமானம் மூலம் விடுதலைப் புலிகள் மூலம்வான் வழித் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்தியாவிடமிருந்து சமீபத்தில் வாங்கப்பட்ட கடற்கரை கண்காணிப்பு கப்பல்உதவியுடன் கடற்படையும் தனது தாக்குதலை பலப்படுத்தவுள்ளது.
நார்வே தூதுக்குழுவை வன்மையாக எதிர்த்துவரும் பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகேமேலும் 1,000 புதிய வீரர்களை ராணுவத்திற்கு அளிப்பதாக ராணுவ தளபதியிடம்கூறியிருக்கிறார்.
விடுதலைப் புலிகளின் சண்டை நிறுத்தம் அவர்கள் தங்களை பலப்படுத்திக்கொள்வதற்காக அறிவிக்கப்பட்டது. அவர்கள் கடந்த சில மாதங்களில் 400போராளிகளை இழந்துள்ளனர்.எனவே அவர்கள் தங்களை மீண்டும் பலப்படுத்திக்கொள்ளத்தான் சண்டை நிறுத்தம் அறிவித்தனர் என இலங்கை அரசு கூறியுள்ளது.
வடக்கு யாழ்ப்பாணம் பகுதியில் சமீபத்தில் நடந்த தாக்குதலில் 14 பெண்கள் உட்பட31 இளைஞர்களின் சடலங்களை ராணுவத்தினர் கண்டனர். விடுதலைப் புலிகள் பயிற்சிபெற்ற பலரை சமீபகாலத்தில் இழந்துள்ளது என பத்திரிக்கை செய்தி ஒன்றுதெரிவிக்கிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications