3-வது அணியெல்லாம் வராது . ஜெ. ஆருடம்
சென்னை:
தமிழகத்தில் 3-வது அணி அமைவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளரும்,முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் புதன்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள். ஆந்திராவிலும்,கர்நாடகத்திலும் ஒரு கட்சி ஆட்சியே நடந்து வருகிறது. இதே போல் தமிழகத்திலும் ஒரு கட்சி ஆட்சியே நடைபெறவேண்டும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி குறித்து தெரிவிப்போம். கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள்பரதன், ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஆகியோருடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினேன். அ.தி.மு.க.வுடன்கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைக்கும்.
காங்கிரசுடன் கூட்டணி குறித்துப் பேசி வருகிறோம். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன்தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் ஜனவரி 20 ம் தேதிக்குப் பின் இதுகுறித்துப் பேசலாம் என்றும்,கூட்டணி குறித்துப் பேசுவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜியை அனுப்புகிறேன் என்றும்கூறினார்.
அ.தி.மு.க.கூட்டணியில் த.மா.கா.கட்சி இருக்குமா என்பது குறித்து மூப்பனாரிடம்தான் கேட்க வேண்டும்.பா.ம.க.வைச் சேர்ந்த யாரும் கூட்டணி குறித்து என்னுடன் பேசவில்லை.
தமிழகத்தில் 3 வது அணி அமையும் என்று தோன்றவில்லை. வரும் தேர்தலில் எந்தக் கட்சிக்கு மக்கள் ஆதரவுஅதிகமாக உள்ளது என்பது குறித்து பல்வேறு அமைப்புக்கள் கருத்துக் கணிப்பு நடத்தி வருகின்றன. தமிழகஅரசின் உளவுத்துறையினரும் இதுகுறித்துக் கருத்துக் கணிப்பு நடத்தினார்கள். கருத்துக்கணிப்பு முடிவில் 65 சதவீதமக்கள் ஆதரவு அ.தி.மு.க.வுக்கே உள்ளது.
என் மீதுள்ள வழக்குகள் காரணமாக தேர்தலில் நான் போட்டியிடுவதில் பிரச்சனை எதுவும் இருக்காது என்றுநினைக்கிறேன். தமிழக சட்டசபைக்கு வரும் 3 மாதத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில் ஜனாதிபதி ஆட்சியைஅமல்படுத்த வேண்டும் என்று நான் கேட்க மாட்டேன். தேர்தல் நெருங்கும் நேரத்தில் மேற்கு வங்கத்தில் ஜனாதிபதிஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா கேட்கிறார்.
திராவிடக் கழகப் பொதுச்செயலாளர் வீரமணி 22 ம் தேதி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த அழைப்புவிடுத்துள்ளார். இதில் அ.தி.மு.க. கலந்து கொள்ளும்.
சாதிக் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் விரும்பத்தகாதவை. அ.தி.மு.க.வுக்கு எதிரானவை. தற்போது அதிகஎண்ணிக்கையில் சாதிக்கட்சிகள் தோன்றியுள்ளன. அவை தேர்தலுக்குப் பின் காணாமல் போய்விடும். வரும்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கே வெற்றி என்பது உறுதியாகிவிட்டது. புதுவையில் எப்போதும் கூட்டணி ஆட்சியேஅமைகிறது என்றார் ஜெயலலிதா.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications