3 எம்.எல்.ஏக்களின் பதவி நீக்கம் சரியே.. பாண்டி. சபாநாயகர்
சென்னை:
பாண்டிச்சேரி சட்டசபையிலிருந்து மூன்று தமிழ் மாநில காங்கிரஸ் (மனோகர் பிரிவு) எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம்செய்ததில், உள்நோக்கம் எதுவும் கிடையாது என்று பாண்டிச்சேரி சட்டசபை சபாநாயகர் ஏ.வி.சுப்ரமணியம்கூறியுள்ளார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மனோகர், ஏழுமலை, ராஜசேகரன்ஆகிய மூவரும், தங்களைப் பதவிநீக்கம் செய்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதற்குப்பதிலளித்து சுப்ரமணியம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது.
எனக்கு எதிராக மூன்று எம்.எல்.ஏக்களும் கூறியுள்ள புகார்கள் பொய்யானவை. அரசியல் உள்நோக்கம்கொண்டவை. இந்தப் புகார்கள் அனைத்தும் தேவையில்லாதது. சட்டப்படியோ, உண்மையின் அடிப்படையிலோஇவை கூறப்படவில்லை.
நான் ஆளும் கட்சி (காங்கிரஸ்)யைச் சேர்ந்தவன் என்பதால் வேண்டுமென்றே இந்தப் புகார்கள் கூறப்பட்டுள்ளன.நானோ அல்லது எனது அலுவலகமோ எந்தவிதமான தவறான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. எனக்குக்கிடைத்த தகவல்கள், விசாரணையில் தெரிய வந்த உண்மைகளின் அடிப்படையிலேயே மூன்றுஎம்.எல்.ஏக்களையும் பதவி நீக்கம் செய்ய முடிவெடுத்தேன்.
அரசியல் சட்டப்படியே இந்த நடவடிக்கையை எடுத்தேன். அரசியல் சட்டத்தின் 10-வது விதிக்குட்பட்டே இந்தநடவடிக்கை அமைந்துள்ளது. எனவே மூன்று எம்.எல்.ஏக்களின் மனுவை கோர்ட் நிராகரிக்க வேண்டும் என்றுகூறியிருந்தார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications