For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலைப் பொருட்கள் கடத்தல் .. சுவாமி திடுக்கிடும் புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இந்தியாவிலிருந்து, விலை மதிப்பற்ற, பல்வேறு கலைப் பொருட்களை விடுதலைப் புலிகள், ஐரோப்பியநாடுகளுக்கு கடத்திக் கொண்டு போயுள்ளார்கள். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக ஜனதாக்கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அத்வானிக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து சென்னையில்செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கலைப் பொருட்கள் கடத்தப்படுவது குறித்து சி.பி.ஐ கண்டு கொள்ளாமல் உள்ளது. அரசியல்காரணங்களுக்காகவும், பிற நெருக்கடிகள் காரணமாகவும், இவ்வாறு சி.பி.ஐ. அமைதி காக்கிறது.

தமிழகத்திலிருந்து கலைப் பொருட்கள் கடத்தப்படுவது குறித்து விசாரிக்க உத்தரவிட்ட இந்திய தொல்பொருள்ஆய்வுத் துறை இயக்குநர் இப்போது அமைதியாக உள்ளார். ஒரு முக்கிய அரசியல்வாதியின் நெருக்குதல்காரணமாகவே அவர் இப்போது அமைதியாகி விட்டார்.

தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட விலை மதிப்பற்ற நவரத்தினக் கற்கள், கோவில் சிலைகள், தேசியஅருங்காட்சியகத்திலிருந்து எடுக்கப்பட்ட பிற பொருட்கள் இப்போது லண்டனிலுள்ள சோத்பீஸ் ஏல நிறுவனம்உள்பட பிரபல ஏல நிறுவனங்களில் உள்ளன.

இந்த கலைப் பொருட்களை கடத்தி, அவற்றை ஏலம் விட்டதில் அந்த அரசியல் புள்ளி மற்றும் அவரதுகுடும்பத்தினருக்கு முக்கியப் பங்கு உண்டு.

எனது கோரிக்கையை அத்வானி ஏற்று விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால், சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில், பொதுநல வழக்குத் தொடர்வேன்.

பெங்களூர் விமான நிலையத்திலிருந்து மதிப்புமிக்க கலைப் பொருட்களை கடத்த முன்னாள் பிரதமர்பி.வி.நரசிம்மராவ் அமைச்சரவையிலிருந்த முக்கிய அமைச்சர் ஒருவர் உதவியுள்ளார். இதுதொடர்பாகபொய்யான சான்றிதழ்களை விமான நிலைய அதிகாரிகளிடம் அவர் சமர்ப்பித்துள்ளார்.

கலைப் பொருட்கள் கடத்தலைத் தடுக்க உறுதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க அத்வானி தவறிவிட்டார். டெல்லியில் அமைந்துள்ள இன்டர்போல், எப்.பி.ஐ. அலுவலகங்கள் தங்களது அதிகாரத்தை தவறாகப்பயன்படுத்துகின்றனவா என்பது குறித்து மத்திய அரசு விசாரிக்க வேண்டும்.

இத்தாலியிலுள்ள இரு முக்கிய நகரங்களில் விலைமதிப்பற்ற இந்திய கலைப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.அவற்றை பார்வையிட்டு மீட்க, ரோம் நகரிலுள்ள இந்திய தூதரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற கலைப் பொருட்கள் கடத்தல் தமிழகத்தில்தான் அதிக அளவில் நடக்கின்றன. எனவே தமிழகத்தில்கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அத்வானி முயற்சி செய்ய வேண்டும்.

சோனியா மீது பாய்ச்சல்:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி மீது ராஜீவ் மனைவி சோனியா காந்தி அனுதாபம் காட்டியதுதவறு. ராஜீவ் கொலையாளிக்குத் தூக்குத் தண்டனை தருவதை ஏன் சோனியா காந்தி எதிர்க்கிறார் என்றுதெரியவில்லை.

கடந்த ஒரு ஆண்டுகளாகவே, வாஜ்பாய் அரசுக்குச் சாதகமாக சோனியா நடந்து கொள்கிறார். இதன் காரணமாகமுக்கியமான சில தேசியப் பிரச்சினைகளில், அரசை எதிர்க்க அவர் தவறி விட்டார்.

கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பனிடமிருந்து மீட்பதற்காக, வீரப்பனுக்கு ரூ. 35 கோடி பணம்கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் தற்போது விடுதலைப் புலிகளுக்குக் கொடுக்கப்பட்டு விட்டது.

கர்நாடக அரசு முதலில் பணத்தைக் கொடுக்க மறுத்தது. ஆனால் கட்டாயப்படுத்தி பணத்தை அவர்களிடமிருந்துவாங்கி விட்டார்கள் என்றார் சுவாமி.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X