போலி பாஸ்போர்ட்டுடன் இலங்கைத் தமிழர் கைது
டெல்லி:
இந்தியாவிலிருந்து போலி தஸ்தாவேஜூகளுடன் கியூபா செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த தமிழரை டெல்லி போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
டெல்லியின் தெற்குப் பகுதியில் உள்ள வசந்த விஹார் பகுதியில் உள்ள கியூபா தூதரகம் அருகே அவர் கைது செய்யப்பட்டார். அவர் பெயர் விக்டர் ஆனந்த செலன் என்ற ரூபென்.
இலங்கையில் தனி ஈழம் கிடைக்க வேண்டி 17 வருடங்களாகப் போராடி வரும் விடுதலைப்புலிகளுடன் இவருக்குத் தொடர்பு இருக்குமா என்று போலீஸார்விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவர் தனது பாஸ்போர்ட்டில் தனது பெயர் குப்புசாமி வினோத் என்றும், சென்னையைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவருக்குப் போலிதஸ்தாவேஜூகள் தயாரித்துக் கொடுத்தது தொடர்பாக சென்னையில் உள்ள டிராவல் ஏஜன்சியில் வேலை செய்து வரும் சுபா ராஜ் என்பவரையும் போலீஸார்கைது செய்தனர்.
இவர் சென்னை தாஸ் டிராவல் ஏஜன்சியில் வேலை செய்து வந்தார். அந்த டிராவல் ஏஜன்சியினர் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு வேறு நாடுகளுக்குச்செல்வதற்கு போலி இந்திய பாஸ்போர்ட் மற்றும் தஸ்தாவேஜூகளைத் தயாரித்து கொடுத்து வந்தனர்.
சுபா ராஜ், ஒரு பயணிக்கு ரூ 10,000 என்ற பணம் வசூல் செய்து போலி பாஸ்போர்ட்டுக்ள் தயாரித்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications