கிராமங்களைக் கவனிங்கப்பா.. சின்னப்பிள்ளை
மதுரை:
கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு தாராளமாக உதவிகள் செய்ய முதல்வர் கருணாநிதியிடம் கேட்டுக் கொள்வேன் என்று ஸ்ரீ சக்தி புரஸ்கார் விருதுபெற்ற சின்னப்பிள்ளை மதுரையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
முதலில் விவசாய தொழிலாளியாக இருந்த சின்னப்பிள்ளை தனது சுய முயற்சியாலும், கடின உழைப்பாலும் பெண்கள் நல சங்கத்தின் தலைவராக உயர்ந்தார்.சின்னப்பிள்ளை மதுரை அருகேயுள்ள புள்ளாச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர். புள்ளாச்சேரி தலித் மக்கள் அதிகம் வாழும் கிராமமாகும்.
இவர் மதுரையில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கிராமங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் நிலையை உயர்த்துவதே எனது குறிக்கோளாகும். எங்களது பெண்கள் நல அமைப்பும்கிராமப்புற மக்களின் நலனிற்காக பல சேவைகள் புரியும்.
எங்களது அமைப்பு குறித்து, முதல்வர் கருணாநிதி சமீபத்தில் எனக்கு ரூ 1 லட்சம் பரிசளிக்கையில் கேட்டுத் தெரிந்து கொண்டார். அடுத்த முறை முதல்வர்கருணாநிதியை சந்திக்கும்போது ஏழைகளுக்கு அதிக உதவி செய்யக் கோரி முதல்வரிடம் வலியுறுத்துவேன். அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கும்வழிவகை செய்யும் படியும் கேட்டுக் கொள்வேன் என்றார்.
சின்னப்பிள்ளை, களஞ்சியம் என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார். மதுரையில் கள்ளச்சாராயம் குடிப்பதைத் தடுத்து நிறுத்தும் பணியை களஞ்சியம்இயக்கம் செய்து வருகிறது.
களஞ்சியம் இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் டான் என்ற மனித வள மேம்பாட்டு அமைப்பின் முதன்மை இயக்குநர் வாசிமலை கூறுகையில்,மதுரை புல்லூத்தில் களஞ்சியம் இயக்கம் சார்பில் போதைப் பொருட்கள் தடுப்பு மையம் ஒன்று அமைத்துள்ளோம். மதுரையிலும், அதனைச் சுற்றியுள்ளகிராமங்களிலும் ஒயின் கடைகள் அதிகரித்து வருவதால் சாராயம் குடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
களஞ்சியம் இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மதுரை, தேனி, ராமநாத புரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல விழிப்புணர்வுபிரச்சாரங்கள் நடத்தி வருகிறார்கள்.
களஞ்சியம் 300 க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தொட்டிகளை அமைத்துக் கொடுத்துள்ளது. தொழிலாளர்களுக்கு அதிக உதவிகளைச் செய்துவருகிறது. பல வங்கிகளிலிருந்து எங்களுக்கு கடன் உதவிகளும் கிடைக்கின்றன என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications