நன்றி, போய் வருகிறேன் .. பில் கிளின்டன்
லிட்டில்ராக்:
அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து பில் கிளின்டன் சனிக்கிழமை ஓய்வு பெறுகிறார்.
அதிபர் கிளின்டன் அமெரிக்க அதிபராக தொடர்ந்து இரண்டு முறை கடந்த 8 ஆண்டுகளாகப் பதவி வகித்தார்.
தனது இறுதி அரசு முறை சுற்றுப்பயணமாக தனது சொந்த மாநிலமான அர்கன்சாஸ் மாநிலத்திற்கு வியாழக்கிழமை சென்றார். அர்கன்சாஸில் அவருக்குஅரசியல் தலைவர்களும், பொதுமக்களும் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.
அவர்களிடையே கிளின்டன் பேசுகையில், சனிக்கிழமை பிற்பகலுடன் நான் அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறேன். அமெரிக்கா என்ற மிகப்பெரியநாட்டின் அதிபராக கடந்த 8 ஆண்டுகளாகப் பதவி வகித்த இந்த சிறுவனுக்கு வாய்ப்பளித்தமைக்காக நன்றி தெரிவிக்கிறேன்.
அர்கன்சாசிஸ், ஹோப் பகுதியில் உள்ள ஹார்வி தெருவில் இருந்த என்னை வெள்ளை மாளிகையில் அமர்த்தியதற்கு மக்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்என்றார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த வில்லியம் புஷ் சனிக்கிழமை பதவியேற்கிறார்.












Click it and Unblock the Notifications