தீவிரவாதிகளின் "ஹிட் லிஸ்ட்டில் மணி ரத்தினம்
டெல்லி:
தீவிரவாதிகளின் கொலைப்பட்டியலில் திரைப்பட இயக்குநர் மணிரத்தினத்தின் பெயர் இருப்பதாக திடுக்கிடும்தகவல்கள் வெளியாகி உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் உள்ள ஆடியோ கேசட் தயாரிப்பாளர் குல்ஷன் குமார் மர்ம மனிதர்களால்சுட்டுக் கொல்லப்பட்டார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை தொடர்பாக கடந்த வாரம் கொல்கத்தாவில் முகமது அப்துல் ராப்என்பவரைப் போலீஸார் கைது செய்தனர். இவர் மும்பை தொடர் குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராஹிமின்கூட்டாளிகளில் ஒருவர் ஆவார்.
இவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
தாவூத் இப்ராஹிம் கோஷ்டியினர் சில முக்கியப் பிரமுகர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தக்கொலைப்பட்டியலில் தொழில் அதிபர்கள், சினிமா பட தயாரிப்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்ப்பட டைரக்டர் மணிரத்தினம், தொழில் அதிபர் திருபாய் அம்பானி, கவுதம் அதிகாரி உள்பட 12 க்கும்மேற்பட்டவர்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தகவல்கள் கிடைத்ததும் சதிகாரர்களின் செயல்கள் அதிகரித்து வருவதால் இதுகுறித்து மத்திய புலனாய்வுப்பிரிவு டைரக்டர் ஷியாமல்தத்தா, உள்துறை செயலாளர் கமல் பாண்டே ஆகியோருடன் மத்திய உள்துறைஅமைச்சர் அத்வானி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தீவிரவாதிகளின் கொலைப்பட்டியலில் டைரக்டர் மணிரத்தினத்தின் பெயர் இடம் பெற்று இருப்பதைத் தொடர்ந்துசென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications