ஐ.ஜனதா தள எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து "சஸ்பெண்ட்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சட்டப்பேரவையில் இருக்கும் ஒன்று பட்ட ஜனதா தளத்தைச் சேர்ந்தஉறுப்பினர் ராஜாராமன் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாககட்சியிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
இது குறித்து செய்தியாளர்க்கு பேட்டியளித்த ஒன்றுபட்ட ஜனதா தளத்தின் பொதுச்செயலாளர் ரகுபதி கூறியதாவது:
கட்சியின் உயர்நிலை கமிட்டியில் கலந்து கொள்ளாத காரணத்தால், ராஜாராமனுக்குவிளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசுக்கு ராஜாராமன்பதிலளிக்காவிட்டால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்.
லோக்சக்தியும், சமதா கட்சியும் ஒன்றுபட்ட ஜனதா கட்சியுடன் இணைந்த பின்புபெத்தபெருமாள் ஒன்றுபட்ட ஜனதாவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர்தொடர்ந்து அந்த பதவியில் நீடிப்பார்.
தேர்தல் குறித்து கட்சியின் செயல்பாடுகள் இந்த மாதம் 22-ம் தேதி கூடவிருக்கும்தேசிய கட்சி உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பின் முடிவு செய்யப்படும்.
ஒன்றுபட்ட ஜனதா தள உயர்நிலைக் குழு கூட்டத்தில் உடனடியாக பாண்டிச்சேரியில்உள்ளாட்சி மன்ற தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். பாண்டிச்சேரி அரசால்நடத்தப்பட்டு வரும் ஆங்கிலேய - பிரான்சு துணி ஆலைகளில் நடைபெற்ற ஊழல்கள்குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற தீர்மானங்களநிறைவேற்றப்பட்டன.
தேசிய ஜனநாயக கூட்டணி, மத்திய ஆட்சிக்கு மட்டும்தான், அது மாநிலங்களுக்குபொருந்தாது என பா.ஜ. க. தலைவர் கூறியிருக்கிறார். இது குறித்து பா.ஜ.க. மட்டும்முடிவு செய்ய முடியாது என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications