புலிகளுக்கு நிதியுதவி .. இங்கிலாந்துக்கு கோரிக்கை
லண்டன்:
விடுதலைப்புலிகளுக்கு நிதியுதவி அளிப்பவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியாவும், இலங்கையும் இங்கிலாந்திடம் வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து இங்கிலாந்து உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
இங்கிலாந்திலிருந்து விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவது குறித்து இலங்கை கவலை தெரிவித்துள்ளது. மேலும், இலங்கையிலிருந்து பலர்இங்கிலாந்தில் குடியேறி வருவது குறித்தும் அது எச்சரிக்கையடைந்துள்ளது.
1989 முதல் 1999 ம் ஆண்டு வரை 19,740 இலங்கைத் தமிழர்கள் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்துள்ளனர். 1999 ம் ஆண்டு மட்டும்இலங்கையைச் சேர்ந்த 5,370 பேர் இங்கிலாந்தில் குடியேறினர். 1998 ம் ஆண்டு 2,100 பேர் இங்கிலாந்தில் குடியேறினர்.
1998 ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 1999 ம் ஆண்டு குடியேறியவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் சட்டப்படிமுறையாக குடியேறும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. யாரும் அனுமதியின்றி குடியேறியவர்கள் அல்ல.
இது தவிர, இலங்கையைச் சேர்ந்த பலர் அகதிகள் அந்தஸ்து வழங்கக் கோரி மனு செய்துள்ளனர். இவர்களது வழக்குகள் இன்னும் தேக்க நிலையிலேயேஉள்ளன. இவர்களின் எண்ணிக்கையே ஆயிரத்தைத் தாண்டும் எனத் தெரிகிறது.
1991 ம் ஆண்டு இலங்கையிலிருந்து இங்கிலாந்தில் குடியேறிய 3,765 பேர், அகதிகள் அந்தஸ்து வழங்குவதற்காக மனுச் செய்துள்ளனர். 1999 ம் ஆண்டுஅகதிகள் அந்தஸ்து வழங்கக்கோரி மனுச்செய்தவர்களின் எண்ணிக்கை 5,130 ஆக உயர்ந்துள்ளது.
1999 ம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த 20 பேருக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் குடியேறிய பலர் விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவிசெய்து வருகிறார்கள் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதற்கிடையே, லண்டனில் உள்ள அலெக்சான்ட்ரா அரண்மனையில் நடந்த விடுதலைப்புலிகள் நடத்திய கூட்டத்தில், 10,000 க்கும் மேற்பட்ட புலிகள்ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இங்கிலாந்தில் குடியேறிய இலங்கை மக்கள் அங்கிருந்து புலிகளுக்காகப் பணம் வசூலித்துக் கொடுப்பதை இந்தியாவும், இலங்கையும் வன்மையாகக்கண்டிக்கின்றன. அதுமட்டுமின்றி புலிகளுக்குச் செய்யும் நிதியுதவியை தடை செய்ய வேண்டுமென்றும் இங்கிலாந்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications