முற்றுகைப் போராட்டம் .. கம்யூ. அறிவிப்பு
கோவை:
மத்திய, மாநில அரசுகளின் விவசாயப் பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து அடுத்த மாதம் தமிழகத்தில் நூறு இடங்களில் அரசு அலுவலகமுற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் நல்ல கண்ணு தெரிவித்தார்.
கோவையில் தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்தவும், தொகுதி நிலவரம் பற்றி அறியவும் வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர்நல்லகண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஊழலை விட மதவாதம் தான் மோசமானது. எனவே, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ளோம். தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனால்அவரை ஏற்றுக் கொள்வதா என்பது குறித்து முடிவு செய்வோம்.
இப்போதைய நிலையில், ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டிற்காக தண்டனை பெற்றிருந்தாலும், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இப்போதுஊழல் ஒரு பிரச்னையே இல்லை, மதவாத சக்திகளைத் தான் எதிர்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இதனை ஒடுக்க வேண்டும். இதற்காக அடுத்துவரும் தேர்தலில மதவாத சக்தியான தி.மு.க, பாரதிய ஜனதாக் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்.
அ.தி.மு.க தான் ஊழல் செய்தது, தி.மு.க செய்யவில்லை என்று கூற முடியுமா? முன்பு சர்க்காரியா கமிஷனின் 29 குற்றப் பத்திரிக்கைகளில் கம்யூனிஸ்ட்கட்சிதான் தி.மு.க வின் ஊழலை வெளிப்படுத்த அடிப்படையாக அமைந்தது. ஆனால் இந்த ஊழலுக்கு பிறகு நாங்கள் தி.மு.க வுடன் கூட்டணி வைத்துக்கொண்டோம். இப்போது இரு கட்சிகளுக்கும் இ டையே உள்ள ஒரு பெரும் பிரச்னை மதவாதம் தான்.
அடுத்து, கூட்டணியில் சாதிக் கட்சிகளை ஏற்க மாட்டோம் என ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்து விட்டார். எனவே, தேர்தலுக்கு பிறகுஜாதிக் கட்சிகள் மறைந்து போகும். தமிழகத்தில் 3வது அணி உருவாகும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
இதில் இரு அணிகள் மட்டுமே இருக்கும். கடந்த தேர்தலில் 11 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி பெற்றோம். இந்த முறை தேர்தல்வரும் நேரத்தில் எத்தனை இடங்களில் போட்டியிடுவோம் என்பது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து ஆலோசனை செய்வோம். இந்தஆலோசனைக்குப் பிறகு தான் தேவையான நடவடிக்கையில் இறங்கவுள்ளேன்.
பாபர் மசூதி ஒரு நினைவுச் சின்னம். அதனை இடித்தது தவறு. அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டக் கூடாது . தமிழக அரசும் சரி, மத்திய அரசும் சரி,இதுவரை விவசாயிகளின் பிரச்னை குறித்து ஆராயவில்லை. சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயிகளின் நிலை பரிதாபத்திற்குள்ளாகி வருகிறது.
எனவே, இந்த நிலையை மாற்றவும், விளைபொருட்களுக்கு உரிய விலை பெறவும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளோம். சுமார் 100இடங்களில் நடக்கும் அரசு அலுவலக முற்றுகைப் போராட்டம் வரும் பிப்ரவரி மாதம் 5, 6, 7 தேதிகளில் நடக்கும் என்றார் நல்லகண்ணு.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications