கும்பமேளா .. புனித நீராடுகிறார் சோனியா
Subscribe to Oneindia Tamil
கும்பா நகர் (அலகாபாத்):
அலகாபாத்தில் நடக்கும் கும்பமேளாவில் திங்கள்கிழமை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேள நிகழ்ச்சிகள் நடக்கும். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும்நதியில் உலகம் முழுவதிலுமிருந்து வரும் பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவது வழக்கம்.
இந்த முறை கும்பமேளாவில் சோனியா காந்தியும் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார். அதன்படி அவர் திங்கள்கிழமை பிற்பகல் அல்லது மாலைஅலகாபாத் வருவார். இதையடுத்து அலகாபாத் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கும்ப மேளாவில் நீராடிவிட்டு சோனியா காந்தி, அலகாபாத்திலுள்ள ஸ்வராஜ் பவனில் தங்குவார். செவ்வாய்க்கிழமை காலை டெல்லி செல்வார்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications