கைகொடுக்கிறார் ஸ்டீவ் வாக்
சிட்னி:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி செய்வதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, சிறப்பு கிரிக்கெட் ஆட்டம்நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டீவ் வாஹ் இந்தப் போட்டியில் கலந்து கொள்லள சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பூகம்பத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி செய்யும் வகையில் நிதி வசூல் செய்வதற்காக இந்தியாவிலோ அல்லது ஆஸ்திரேலியாவிலோ இப் போட்டி நடத்தப்படும்.
ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்கள், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் அங்கு முழுவீச்சில் நிதிதிரட்ட ஆரம்பித்துவிட்டனர். சிட்னி நகரில் வசிக்கும் 2,000 க்கும் மேற்பட்ட குஜராத் மக்கள், நிதியுதவி செய்துள்ளனர். நிதி திரட்டும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள குஜராத் சமாஜத்தின் தலைவர் ஹரி கோகில் கூறுகையில், குஜராத்தில் ஏற்பட்டுள்ள பூகம்பம் குறித்து ஆஸ்திரேலியாவில்வாழும் மக்களுக்கு தெரியும் வகையில் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சியிலும் தொடர்ந்து விளம்பரங்கள் கொடுத்து வருகிறோம்.
அந்த விளம்பரங்கள் மூலம் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி செய்யுங்கள் என்று பிரச்சாரம் செய்து வருகிறோம்.
அகமதாபாத் அருகேயுள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் எனது உறவினர்களைத் தொடர்பு கொள்ள முயன்றேன். அங்கு தகவல் தொடர்புகடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் என்னால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. என்னைப்போல் இங்கு வாழும் அதிகமான மக்கள்,தங்களது உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள் என்றார்.
ஐக்கிய இந்திய சங்கத்தினர், ஏற்கனவே நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சிட்னி நகரில் உள்ள குஜராத் பூகம்ப நிவாரண நிதி என்றபெயரில் தேசிய வங்கியில் கணக்கு துவக்கியுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications