பள்ளியில் வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் இருக்கும் தனியார் பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கும் என்று வந்ததொலைபேசி தகவல் புரளி என தெரியவந்தது.
இது குறித்து போலீசார் கூறுகையில், வள்ளலார் சாலையில் இருக்கும் தனியார்பள்ளியின் ஆசிரியர் ஒருவருக்கு அந்த பள்ளியில் வெடி குண்டு இருப்பதாகவும் அதுநண்பகலுக்குள் வெடிக்கும் எனவும் தொலைபேசி மூலம் தகவல் வந்தது.
இதையடுத்து பள்ளியில் இருந்த மாணவர்கள் அனைவரும் அருகில் இருந்த திருமணமண்டபத்திற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மோப்ப நாய்களுடன் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.
வெடிகுண்டு கண்டுபிடிக்கும் நிபுணர்களும் வந்தனர். அவர்கள் அனைவரும் தீவிரமாகசோதனை செய்த பின் தொலைபேசியில் வந்த தகவல் புரளி என தெரியவந்தது.ஆனாலும் பின்னர் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications