ரூ. 500 கோடி நிதியுதவி
பூஜ்:
பூஜ் மற்றும் அகமதாபாத், ரட்னால், அட்வாய், ஃபாட்டிக் போர், அஞ்சார் பகுதிகளை நேரிலும், விமானம் மூலமும் பார்வையிட்ட பிரதமர்வாஜ்பாய், குஜராத் மாநில பூகம்ப நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ 500 கோடி அளிக்கும் என்று அறிவித்துள்ளார்.
திங்கள்கிழமை இரவு அகமதாபாத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஒரிசாவில் புயல் ஏற்பட்டபோது இதேபோல் நெருக்கடியைச் சந்தித்தோம்.இப்போது மீண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. நிவாரண நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார்.
வாஜ்பாயுடன் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி கூறுகையில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி செய்யும்ஊழியர்களுக்கு வருமானவரி சலுகை அளிக்கப்படும் என்றார்.
முன்னதாக, குஜராத்தில் பூகம்பத்தால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதால், ரயில்வே, தொலைத்தொடர்பு, பஸ் போக்குவரத்து கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளது.
பெரும் சேதமடைந்த பூஜ் மற்றும் அகமதாபாத் நகரங்களில் இடிபாடுகளை சீர்செய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. வெளிநாட்டு மற்றும்இந்திய நிபுணர் குழுவினர் மீட்புப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமானத்துறை அமைச்சர் சரத் யாதவ், அனைத்து விமானங்களும் குஜராத்துக்குச் சென்று நிவாரணப் பொருட்களை இறக்கியும், அங்கு பாதிக்கப்பட்டநிலையில் இருக்கும் மக்களை வேறு மாநிலங்களுக்குக் கொண்டு வரவும் உத்தரவிட்டுள்ளார்.
சீர்குலைந்து போன ரயில்வே பாதைகளைச் சரி செய்து, சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில்களை விடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இன்னமும் இடிபாடுகளை அகற்றவும், இடிந்து விழுந்த மிகப்பெரிய கட்டிடங்களை அகற்றவும் தேவையான அதிநவீன இயந்திரங்கள்பற்றாக்குறையாகவே உள்ளது.
டெல்லிக்கும், பூஜ்ஜூக்கும் இடையே இப்போதுதான் முதல்முறையாகத் தொலைத்தொடர்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போதுதொலைத்தொடர்பை சீர் செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. எஸ்.டி.டி மற்றும் ஐ.எஸ்.டி. போன்களை இலவசமாக செய்யுமாறு பொதுமக்களுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது.வெளிநாட்டிலிருந்து குஜராத் வரும் மீட்புக்குழுவினருக்கு 15 நாட்கள் விசா கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications