பூகம்ப வதந்தி .. பெண்கள் தாலி பூஜை
சேலம்:
திருப்பதியிலுள்ள அலமேலுமங்காபுரம் கோவிலில் உள்ள சுவாமியான அலமேலுமங்காவின் கழுத்தில் இருந்த தாலி தானாக இறங்கியதாக பரவிய செய்தியைத்தொடர்ந்து பயமடைந்த பெண்கள் தாலி பூஜை செய்து தாலியை மாற்றிக் கொண்டனர்.
ஆந்திர மாநிலத்தில் இருப்பது உலக பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதிதிருக்கோயில். மலை மேல், திருமலாவில் வெங்கடாஜலபதி கோயிலும், கீழே திருப்பதிஅடிவாரம், அலமேலுமங்காபுரத்தில் அலமேலுமங்கா தேவி கோயிலும் இருக்கிறது.
திங்கள்கிழமை காலை அலமேலுமங்கா தேவியின் கழுத்தில் இருந்த தாலி தானாகஇறங்கியதாக கூறப்பட்டது. இது அபசகுனமாகவும், பூகம்பத்திற்கானஎச்சரிக்கையாகவும் செய்தி பரவியது.
இந்த செய்தியை ஆந்திராவில் இருந்தவர்கள் தமிழகத்தில் இருக்கும் தங்கள்உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்ததால் திங்கள்கிழமை மாலைதமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெண்கள் பயந்து தாலி பூஜையில் ஈடுபட்டனர்.
தர்மபுரியில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பயத்தில் இரந்த தர்ம்பரி தர்மபுரிமாவட்ட மக்களுக்கு இந்த செய்தி பெரும் பீதியை ஏற்படுத்தியது. சேலம் மற்றும்தர்மபுரி மாவட்ட மக்கள் பெரும் கவலைக்குள்ளானார்கள்.
சேல ம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, கரூர், திண்டுக்கல்,திருவண்ணாமலை உள்ளிட்ட பல ஊர்களில் ஏராளமான பெண்கள் கோவிலில் சிறப்புபூஜையில் செய்தனர்.
பெண்கள்.தங்கள் கணவனின் பெயர் ராசிக்கு அர்ச்சனை செய்து தங்கள் கணவருக்குஎந்த ஆபத்தும் வரக்கூடாது, தங்கள் தாலி நிலைத்திருக்க வேண்டும் என பிரார்த்தனைசெய்து கொண்டனர்.
பின்னர், வீட்டிற்கு வந்து வீட்டிற்கு அருகில் இருக்கும் வயதான சுமங்கலி பெண்கள்உதவியுடன் கழுத்தில் இருந்த தாலியை அகற்றாமல் புது மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர்.
ஆந்திர மாநில போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் நடத்தியவிசாரணையில் அலமேலுமங்காதேவியின் கழுத்தில் இருந்த தாலி இறங்கியதாக வந்துசெய்தி சமூக விரோதிகள் கிளப்பிய வதந்தி என தெரியவந்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications