வெல்ல உற்பத்தி பாதிப்பு
கோலாப்பூர்:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட உறவினர்களைப் பார்ப்பதற்காக கோலாப்பூரிலுள்ள வெல்ல உற்பத்தியில்ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் குஜராத் சென்று விட்டதால் அங்கு வெல்ல உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கோலாப்பூரில் தயாராகும் வெல்லத்திற்கு குஜராத் மாநிலத்தில் பூஜ் மற்றும் அகமதாபாத் மாவட்டங்களில் நல்லகிராக்கி உள்ளது. இங்குள்ள வெல்ல ஆலைகளில் வெல்லம் மற்றும் சர்க்கரை ஆலைகளில் வேலை செய்பவர்களில்பெரும்பாலானவர்கள் குஜராத்திலிருந்து வந்தவர்கள்.
பூகம்பத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டதால் வெல்லம் ஆலைக்கு வேலைக்கு ஊழியர்கள் யாரும் வரவில்லை.இதனால் ஆலைக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி மற்றும் வியாபாரம் கடந்த 4நாட்களாக நடக்கவேயில்லை.
வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலையில் ஆள்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகளும் செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, சர்க்கரை ஆலை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஏற்கனவே உற்பத்திசெய்த சர்க்கரையில் 75 சதவீதத்தை சந்தைக்கு அனுப்பி விட்டோம். இப்போது ஆட்கள் பற்றாக்குறையால்உற்பத்தையை நிறுத்தி விட்டோம்.
வெல்ல உற்பத்தி மட்டுமல்லாமல், தினமும் கோலாப்பூரிலிருந்து அகமதாபாத்துக்கு சர்க்கரை ஏற்றுமதிசெய்யப்படுவது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கோலாப்பூரிலிருந்து வெல்லத்தை ஏற்றிச் செல்லும் லாரிகள்ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கோலாப்பூர் மாவட்ட விவசாயப் பொருள் உற்பத்தி கமிட்டி உறுப்பினர்கள், இன்னும் 2 நாட்களில் நிலைமைசரியாகி விடும் என்று நினைக்கிறார்கள்.
மேலும் கோலாப்பூரில் வசிப்பவர்கள் குஜராத்தில் ஏற்பட்ட பூகம்ப அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.இதனால் கோலாப்பூரில் இயங்கி வரும் வெல்ல ஆலையில் வேலை செய்ய ஆட்களே இல்லை என்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications