எண்ணெய்க் கசிவு இல்லை
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் கட்ச் மாவட்டத்திலுள்ள கான்ட்லா துறைமுக பகுதியிலுள கடலில்எண்ணெய்க் கசிவு எதுவும் ஏற்படவில்லையென்று இந்திய கடலோரக் காவல்படை கூறியுள்ளது.
வியாழக்கிழமை இந்திய கடலோரக் காவல்படை தினத்தையடுத்து, இந்தியக் கடலோரக் காவல்படை இயக்குநர்,அட்மிரல் ஜான் டி சில்வா, கூறுகையில், கான்ட்லா துறைமுகத்தில் உள்ள எண்ணெய் வைக்கப்பட்டுள்ள கப்பல்கள்சேதமடையவில்லை. மேலும், அந்தக் கப்பல்களிலிருந்து எண்ணெய்க கசிவும் ஏற்படவில்லை.
பழைய கான்ட்லாவில் உள்ள சரக்கு அறையில் எண்ணெய் டின்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. குஜராத்மாநிலத்தில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தையடுத்து கான்ட்லா துறைமுகத்தில் உள்ள கப்பல்களில் வைக்கப்பட்டுள்ளஎண்ணெய் டேங்கர்களிலிருந்து எண்ணெய்க் கசிவுகள் ஏற்பட்டுள்ளன என்று செய்தி வெளியாகியுள்ளது. அதுதவறு.
இரண்டு பத்திரிக்கைகள், பூகம்பத்தால் கான்ட்லா துறைமுகத்தில் உள்ள கப்பல்களில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்டேங்கர்களிலிருந்து மிகப்பெரிய அளவில் எண்ணெய்க்கசிவு ஏற்பட்டுள்ளது என்று செய்திகளைப்பிரசுரித்துள்ளது. ஆனால் பத்திரிக்கைகளில் வெளியான செய்தியைப்போல் மிகப்பெரிய எண்ணெய்க்கசிவுஎதுவும் ஏற்படவில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட புயலில் கான்ட்லா துறைமுகத்தில் வேலை செய்து கொண்டிருந்தநூற்றுக்கணக்கான ஊழியர்கள் உயிரிழந்தனர். நிவாரணப்பணிகள் ஒரு மாதமாக நடந்தன. ஆனால் இந்த முறைஏற்பட்ட பூகம்பத்தால் கான்ட்லா துறைமுகத்தில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
பூகம்பத்தால் எண்ணெய் சுத்திக்கரிப்பு, பெட்ரோகெமிக்கல், இரும்புத் தொழிற்சாலை மற்றும் வைரதொழிற்சாலைகள் ஆகியவற்றில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications