"கொள்கை மறவாதீர் மக்கள் தலைவரே ...

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ், அ.தி.மு,க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் அக் கட்சிஆரம்பிக்கப்பட்டதன் கொள்கையே மாறி விடும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் மூப்பனாருக்கு, எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க. தலைவர் திருநாவுக்கரசுகூறியுள்ளார்.

அ.தி,மு,க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டதை எதிர்த்து த.மா.கா.வை துவக்கினார்மூப்பனார் (மக்கள் தலைவர் என்று த.மா.கா. தொண்டர்கள் மூப்பனாரை அழைப்பதுவழக்கம்).

இப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் அவரது கொள்கையேமாறி விடும். மக்கள் நலத்தில் அக்கறை கொண்டு அவர் நல்ல முடிவை எடுக்கவேண்டும் என அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். திருநாவுக்கரசு கூறியுள்ளார்,.

புதன்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், குஜராத் பூகம்பநிவாரண நிதியாக எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. சார்பிலும், எம்.பி. என்ற முறையிலும் ரூ11 லட்சத்து 15 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும்.

ரூ 10 லட்சம் எம்,பி. தொகுதி நிதியிலிருந்தும், ரூ 1லட்சம் கட்சியின் சார்பிலும், ரூ 15ஆயிரம் என் 1 மாத சம்பளமும் வழங்கப்படும்.

முதல்வர் தாக்கல் செய்துள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கை அனைத்து மக்களுக்கும்நன்மை பயக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

திருச்சி தேசிய லீக் கூட்டத்தில் ஜெயலலிதா சிறுபான்மை மக்களை காப்பதாகபேசியிருப்பது தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காக பேசியுள்ளபேச்சு.

1996-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததை எதிர்த்துமூப்பனார் தமிழக மாநில காங்கிரஸ் கட்சியை துவங்கினார். இப்போது அவர்அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் அவர் கொள்கையே பாதிக்கப்படும்.மக்கள் நலனில் அக்கறை கொண்டு அவர் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

தேசியஜனநாயத கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் ஏ.சி. சண்முகத்தின் மூன்றாவதுஅணியில் சேராது. வரவிருக்கும் தேர்தலில் ஜெயலலிதா கண்டிப்பாக போட்டியிடமுடியாது என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+