காஷ்மீரிகள் ரத்த தானம்
ஸ்ரீநகர்:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஸ்ரீநகரில் ஏற்பாடு செய்யப்பட்ட ரத்ததான முகாமில், 85 பேர் ரத்ததானம் செய்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநில விடுதலை முன்னணியினர் ரத்த தான முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். விடுதலை முன்னணியின் மூத்த தலைவகள் ஜாவித் மிர், பாஷிர் பட்,யாக்கூப் பட் ஆகியோர் முதலில் ரத்த தானம் செய்து, ரத்த தான முகாமைத் தொடங்கி வைத்தனர். பின்னர் விருப்பமுள்ளர்கள் ரத்ததானம் செய்தனர்.
பின்னர் ஜாவித் மிர் கூறுகையில், ரத்த தான முகாமில் 85 பேர் ரத்த தானம் செய்துள்ளோம். தானம் மூலம் கிடைத்த ரத்தத்தை இங்குள்ள மருத்துவமனையில்கொடுத்துள்ளோம். அங்கிருந்து ரத்தம் குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநில ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை குஜராத் நிவாரண நிதிக்காகக் கொடுக்கிறார்கள். முதல்வர் பரூக் அப்துல்லா ரூஒரு கோடியை குஜராத் நிவாரண நிதிக்காக ஏற்கனவே அனுப்பி வைத்து விட்டார்.
இதுதவிர, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் மூத்த தலைவர் யாசீன், கட்சித் தொண்டர்கள் தானம் செய்த 80 பாயிண்டுகள் ரத்தம் வைக்கப்பட்டபாட்டில்களை புதன்கிழமை டெல்லிக்கு வந்து கொடுத்தார். அவர் கொண்டு வந்து கொடுத்துள்ள ரத்தம் குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டமக்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications