எரிமலை வெடித்ததா?
அகமதாபாத்:
குஜராத்தின் டோல்கா கிராமத்தில், பூகம்பம் ஏற்பட்ட தினத்தன்று எரிமலைக் குழம்பு போன்ற மண்வெளியேறியதால் கிராமத்து மக்கள், எரிமலைதான் வெடித்து விட்டதோ என்ற பீதியில் உள்ளனர்.
இங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் கிராமம் முழுவதும் கட்டிடங்கள் எல்லாம் இடிந்து, களிமண்ணும், சுடுநீரும், சேறுநிறைந்த வயல்களுமாகக் காட்சியளிப்பதால் இங்கு வாழும் மக்கள் இன்னும் பயத்திலேயே உள்ளனர்.
ஜனவரி 26 ம் தேதி பூகம்பம் ஏற்பட்டபோது, அகமதாபாத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள டோல்காகிராமம் முழுவதும் பலத்த சேதம் ஏற்பட்டது. பூகம்பத்தையடுத்து நிலத்திற்கு கீழே இருந்த வந்த சுடுநீரும், சேறும்கிராமத்தையே வெட்டவெளியாக்கி விட்டது.
பூகம்பம் ஏற்பட்டபோது, வெளியாகிய மண் குழம்பைப் பார்த்து, எரிமலைக் குழம்பு என கிராமத்து மக்கள்நினைத்தனர். பூகம்பத்தையடுத்து பூமிக்கு கீழே எரிமலை வெடித்து விட்டதோ என அவர்கள் பயந்தனர். ஆனால்,விஞ்ஞானி ஜே.ஆர். திரிவேதி கூறுகையில், பூகம்பத்தன்று வெளியானது எரிமலைக் குழம்பு அல்ல. அந்தப்பகுதியில் ஏற்கனவே சுடுநீர் படிவுகள் இருக்கின்றன. பூம்பத்தின்போது அவை வெளியே வந்துள்ளன என்றார்.
பூகம்பம் வந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும், இதுவரை விஞ்ஞானிகள் யாரும் டோல்கா கிராமத்திற்குச்செல்லவில்லை. மேலும் இங்குள்ள கிராம மக்கள் அனைவரும் எந்த நேரத்திலும் நிலத்தடியிலிருந்து எரிமலைக்குழம்பு வெளியேறி கிராமம் முழுவதும் பரவலாம் என்ற பயத்தில் உள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications