வேறுபாடுகளை மறந்து ..
அகமதாபாத்:
குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டு பலர் உயிரிழந்ததையடுத்து, பூகம்பத்திலிருந்து தப்பியவர்கள் தங்களுக்குள் ஜாதி,மத, இன வேறுபாடுமின்றி ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கிறார்கள்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு ரயில்வே நிலையத்தில் உள்ள, பார்வையற்றோர் சங்கம்தங்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்து கொடுக்கிறது. பூகம்பத்தால் கால்களை இழந்தவர்களுக்கு, மூன்று சக்சரவாகனங்கள், வாக்கிங் ஸ்டிக் ஆகியவற்றைக் கொடுத்து உதவுகிறார்கள்.
பார்வையற்றோர் சங்க இயக்குநர் பூஷன் புனானி கூறுகையில், பொதுவாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக,பொதுமக்களிடமிருந்து வசூல் செய்து கொடுக்கிறோம். தற்போது அவசர உதவி தேவைப்படும் மக்களுக்கு,உடனடியாக உதவி செய்து வருகிறோம் என்றார்.
அகமதாபாத் ரயில்வே நிலையத்தில், போர்ட்டர்கள் சங்கத்தினர், கட்ச் மற்றும் பூஜ்ஜூக்குச் செல்லும் பலரிடம்உணவுப் பொட்டலங்களைக் கொடுத்தனுப்புகிறார்கள்.
போர்ட்டர்கள் சங்கத் தலைவர் காசிம் இமாம் பாஷா கூறுகையில், ரயில்வே நிலையங்களில் வேலை செய்யும்போர்ட்டர்கள் தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். தாங்கள் சம்பாதிப்பதில் அவர்கள் ரூ 50 வசூல் செய்து 24மணிநேரமும் இயங்கும் சமைல் அறையை அமைப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர். அகமதாபாத்ரயில்வே நிலையத்தில் மொத்தம் 650 போர்ட்டர்கள் உள்ளனர் என்றார்.
ஆசிரியர் பயிற்சி பள்ளி மற்றும் பள்ளி நடத்தும் ஏகலாவா கல்வி நிறுவன உறுப்பினர்கள், பூகம்பத்தால் வீடுகளைஇழந்த சிறுவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின்நலனிற்காக அவர்கள் குழந்தைகள் காப்பகம் ஒன்றை உடனடியாகத் திறந்தனர்.
இதுகுறித்து ஏகலாவா கல்வி நிறுவன பிரதிநிதி மோனா மல்கோத்ரா கூறுகையில் குழந்தைகள் காப்பகம் திறந்த 2மணி நேரத்தில் நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 10 குழந்தைகள் வந்து சேர்ந்துள்ளனர்.
எங்கள் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கம்பளிகள், கூடாரங்கள்அமைப்பதற்கான பொருட்கள் ஆகியவற்றை வசூல் செய்து வருகிறார்கள். ஆனால் வீடுகள், உடைமைளைஇழந்தவர்கள் புதிய வீடுகள் கட்டவும், புதிய வேலையைத் தேடவும் ஏதாவது செய்ய வேண்டும் என்றுநினைக்கிறோம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications