இன்சூரன்ஸ் கோரிக்கைகள்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் உள்ள காப்பீட்டுக் கழகங்களில் நஷ்டஈடு கோரி இதுவரை 8,500 மனுக்கள் வந்துள்ளன. இவர்கள் கொடுக்க வலியுறுத்தியபணத்தின் மதிப்பு ரூ 200 கோடியாகும்.

இதுகுறித்து தேசிய காப்பீட்டுக் கழக நிறுவன மனோஜ் ஷா கூறுகையில், குஜராத்தில் கடந்த ஜனவரி 26 ம் தேதி பூகம்பம் ஏற்பட்டது. இந்தபூகம்பத்தில் பலர் தங்களது உறவினர்களை, உடைமைகளை இழந்தனர். இவர்கள் தங்களுக்கு நஷ்டஈடு வழங்கக்கோரி காப்பீட்டுக் கழகத்தில் மனுச்செய்துள்ளனர்.

தேசிய காப்பீட்டு நிறுவனத்திற்கு ரூ 94 கோடி நஷ்டஈடு வழங்குமாறு பல மனுக்கள் வந்துள்ளன. நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு 57.25 கோடிநஷ்ட ஈடு வழங்குவதற்காக மனுக்கள் வந்துள்ளன.

நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு 3,587 மனுக்களும், தேசிய காப்பீட்டுக் கழகத்திற்கு 1,867 மனுக்களும், ஒரியன்டல் இன்ஷூரன்ஸ்கழகத்திற்கு 1,640 மனுக்களும், யுனைட்டட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு 1,322 மனுக்களும் வந்துள்ளன.

இந்த நான்கு காப்பீட்டுக் கழகங்களும் குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டதையடுத்து மாநிலம் முழுவதும் விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது முதல் 3 நாட்களில் 300 விண்ணப்பப் படிவங்கள் வந்தன. தற்போது ஒரு நாளைக்கு 300 விண்ணப்பப்படிவங்கள் என்ற அளவுக்கு விண்ணப்பங்கள் அதிக அளவு வருகின்றன.

130 விண்ணப்பங்களுக்கு இதுவரை ரூ 50 லட்சம் ரூபாய் வரை நஷ்டஈடு கொடுக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த வாகனங்கள், வீடுகள் மற்றும்கடைகளுக்கும் நஷ்டஈடு வழங்கப்படும் என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+