கைவிடாத கதிரவன்
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் பூகம்பம் ஏற்படுத்தி பூமி சதி செய்தாலும், சூரியன் மக்களைக் கைவிடவில்லை.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சோலார் குக்கர்கள் உணவுகளை சமைப்பதற்கு உதவுகின்றன. சோலார் குக்கர்களில் உணவு சமைப்பதற்குநல்ல சூரிய வெளிச்சம் இருந்தால் போதும். குஜராத் மாநிலத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கட்ச் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குசிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் பரிசோதனை உபகரணங்களை பயன்படுத்துவதற்கு சோலார் குக்கர்களில் வெந்நீர் வைத்துப் பயன்படுத்துகிறார்கள்.
இதுகுறித்து இந்திய நிர்வாகத்துறைக் கழக வேளாண்துறை பேராசிரியர் கிரிஜா ஷரண் நிருபர்களிடம் கூறுகையில், குஜராத் பூகம்பத்தில் மிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்டது கட்ச் மாவட்டம்தான். தற்போது கட்ச் மாவட்டத்தில் நிவாரண உதவிகள் செய்து கொடுக்கும் குழுவினர் 50 சேலார் பிரஷர்குக்கர்களை வைத்திருக்கிறார்கள். இன்னும் 500 குக்கர்களை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.
இந்தக் குக்கர்கள் மூலம் ஒரு நாளைக்கு இருமுறை 80 பேருக்கு உணவு சமைத்துக் கொடுக்கப்பட்டு வருகிறது. பச்சாவ் நகரில் உள்ள ஆனந்த் கனிகாஉயர்நிலைப்பள்ளி இடிந்து விழுந்து விட்டதால் உடனடியாக அங்கு படித்துக் கொண்டிருந்த 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியே கூடாரம்அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.
நிவாரணப் பணிக்குழுவைச் சேர்ந்த ஒருவர், ஒரே சமயத்தில் 20 முதல் 30 வரை குக்கர்களில் சமையல் செய்யலாம். சமைப்பதற்கு அதிக நேரம் எடுக்காது.பச்சாவ் - பூஜ் பகுதியில் பூகம்பத்தால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக சோலார் குக்கரில் வெந்நீரும் வைத்து எடுத்துச் செல்லப்படுகிறதுஎன்றார் அவர்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications