ஒரு கோவில் மட்டும்..
வார்சாமேடி (குஜராத்):
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஏராளமான உயிர்ப்பலிகள், சேதங்கள் ஏற்பட்டும் வார்சாமேடி என்ற கிராமத்திலுள்ள ஒரே ஒரு கோவில்மட்டும் எவ்வித சேதமும் இன்றி நிலையாக உள்ளது.
குஜராத் மாநிலத்தில் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தில் கட்ச் மாவட்டத்திலுள்ள பூஜ், அஞ்சார், அகமதாபாத் மாவட்டம் உள்பட பலநகரங்களிலுள்ள கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து தரைமட்டமாகி விட்டன. நகர் முழுவதும் புழுதிக் காடாய்க் காட்சியளிக்கிறது.
அஞ்சார் நகரிலுள்ள அனைத்து கட்டிடங்களுமே இடிந்து விழுந்து விட்ட நிலையில் சில வீடுகளில் மட்டும் விரிசல்ககள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் அஞ்சார்நகரையடுத்துள்ள வார்சாமேடியிலுள்ள 525 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கிருந்து போக மாட்டோம் என்று பிடிவாதமாக இருக்கிறார்கள்.ஏனெனில் இங்குள்ள ஒரே ஒரு கோவில் மட்டும் எந்தவிதச் சேதமும் இன்றி உள்ளது.
இந்த கிராம மக்கள் கூறுகையில், கடவுள் இங்கேயிருந்து நாங்கள் நகரக்கூடாது என்று நினைக்கிறார். அதனால் நாங்கள் இங்கிருந்து எங்கும் செல்லமாட்டோம் என்கிறார்கள்.
இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் சைரயு அமின், பொதுச் செயலாளர் மித்ரா, கேர் மையத்தின் டாம் அல்சேடோ ஆகியோர் கட்ச் மாவட்டத்தில்இடிந்து கிடந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகளை நேரில் சென்று பார்த்து மாற்று நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருகிறார்கள்.
முன்னதாக, வார்சாமேதியிலுள்ள மக்கள் கூறுகையில், எங்களுக்குக் கடவுளின் அருள் இருப்பதால்தான் இங்குள்ள ஒரே ஒரு கோவில் மட்டும் எவ்விதசேதமும் அடையாமல் இருக்கிறது. இனிமேலும் எங்களுக்கு கடவுளின் அனுக்கிரகமும், ஆசிர்வாதமும் தேவை. கடவுளின் ஆசிர்வாதம் இருந்தால் நாங்கள்கண்டிப்பாக மறுவாழ்வு பெறுவோம் என்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications