வானிலிருந்து ஒரு "பல்டி .. உயிர் தப்பிய பெண்
கோலாலம்பூர்:
வானிலிருந்து குதிக்கும் போது பாராசூட் விரியாமல் இருந்ததால், உயிரிழந்து விடுவார் என்று கருதப்பட்ட மலேசியாவைச் சேர்ந்த பெண் 1.5கிலோமீட்டர் தொலைவிலிருந்து பூமியில் விழுந்தும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
மலேசியாவிலுள்ள கோலாலம்பூரைச் சேர்ந்தவர் டாங்க் (27). இவர் கடந்த பிப்ரவரி 4 ம் தேதி கோலாலம்பூர் விமான தளத்திலிருந்து பாரசூட் மூலம்விண்ணில் பறந்து அங்கிருந்து கீழே குதிக்க நினைத்தார்.
திட்டப்படி அவர் குதிக்க முயன்ற சமயத்தில் பாரசூட் விரியவில்லை. இதையடுத்து 1.5 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தார். ஆனால் லேசானகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
இதுகுறித்து டாங்க் கூறுகையில், நான் உயிர்பிழைத்ததை என்னாலேயே நம்பவே முடியவில்லை. மேலிருந்து குதிக்கும் போது பாரசூட் விரியாமல் இருந்தும்நான் உயிர்பிழைத்து விட்டேன் என்பது எனது அதிர்ஷ்டம்தான்.
முதலில் மேலிருந்து குதிப்பதற்காக விமானத்தில் உள்ள இரும்புக் கம்பியை மிகவும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன். அங்கிருந்து குதிக்க முயன்றபோது பாரசூட் விரியவில்லை. மேலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவிலிருந்து மண்ணில் விழுந்தேன்.
கீழே விழுவதற்கு முன் எனது பயிற்சியாளர் பாரசூட்டை விரிக்குமாறு வாக்கி டாக்கி மூலம் என்னைத் தொடர்பு கொண்டு கூறினார். ஆனால் அதுமுடியாமல் போயிற்று.
நான் கீழே விழுந்த பின் என்ன நடந்தது என்று எனக்கு எதுவும் தெரியாது. அதற்குப்பின் 3 மணி நேரங்களுக்குப்பின் எழுந்து பார்த்த போது நான்உயிர்பிழைத்து விட்டேன் என்று தெரிந்தது.
கடவுள் கண்டிப்பாக அனைத்து வல்லமையும் பெற்றவர். அவரது அருளால்தான் நான் பிழைத்தேன். இல்லாவிடில் சாதாரண மணற்பரப்பில் விழாவில்மிகவும் கோரமான பகுதியில் விழுந்திருந்தால் இந்நேரம் இறந்திருப்பேன் என்றார் டாங்க்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications