சென்சஸ் .. "தவறான தகவல் கொடுத்தால் நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மக்கள் தொகை கணக்கெடுக்க வரும் அலுவலர்களிடம் சரியான தகவல் கொடுக்கமறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மக்கள் தொகைகணக்கெடுப்பு அதிகாரி டாக்டர் சந்திரமெளலி எச்சரித்துள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடந்து வருகிறது என்பது பற்றிசென்னையில், நிருபர்களுக்கு டாக்டர் சந்திர மெளலிபேட்டி அளித்தார். அப்போதுஅவர் கூறுகையில், திருவள்ளூரில் இருக்கும் ஒரு வீட்டிற்கு மக்கள் தொகை கணக்குஎடுக்கப் போன அலுவலர் மீது அந்த வீட்டினர் நாயை அவிழ்த்து விட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு அந்த வீட்டிலுள்ளவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். மறுத்தால்அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் தொகை கணக்கு எடுக்கவருபவர்களை பாதுகாக்கும் சட்டத்தின் படி அவர்களுக்கு சிறை தண்டனை கூடவிதிக்கலாம்.

இந்த முறை தான் முதன்முதலாக வீடு இல்லாதவர்கள், தெருவில் இருக்கும்குழந்தைகளும் மக்கள் தொகை பட்டியலில் சேர்க்கப்படவிருக்கிறார்கள்.

குடி பெயர்ந்தவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நாடு முழுவதும் இந்த மாதம் 28-ம் தேதிநடைபெறும். இதற்கு தொண்டு நிறுவனத்தினர் பலரும் மக்கள் தொகைகணக்கெடுப்பாளர்களுக்கு உதவ இருக்கிறார்கள்.

மக்கள் தொகையில் ஆண்கள் எவ்வளவு, பெண்கள் எவ்வளவு என்பது குறித்தவிவரங்கள் மார்ச் மாத இறுதியில் வெளியிடப்படும்.

மார்ச் 1-ம் தேதி நள்ளிரவு தமிழகத்தின் 3 முக்கிய துறைமுகங்களான சென்னை.தூத்துக்குடி, எண்ணூ

ராணுவம், கடற்படை, விமானப்படை. கடலோர காவல்படை, மத்திய ரிசர்வ் போலீஸ்,மத்திய தொழிலக சிறப்பு படை, அதிரடிப் படை, எல்லைக் காவல் படை மற்றும் பலபிரிவுகளில் உள்ளவர்கள் பற்றி கணக்கெடுக்க 59 சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.இதே அளவுக்கு ராணுவத்திலும் கணக்கெடுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இருக்கும் பாதுகாப்பு படையினர் குறித்தவிவரங்களை சேகரிக்க 184 மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்களும், 65சதவிகித ராணுவ, புறக்காவல் படையின் கண்காணிப்பாளர்களும்நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறினார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+