அம்மனுக்கு "அம்மாவின் காணிக்கை
Subscribe to Oneindia Tamil
மைசூர்:
கர்நாடக மாநிலம் மைசூரில் இருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு ரூ 4 லட்சம்மதிப்புள்ள நகைகளை ஜெயலலிதா காணிக்கையாக கொடுத்துள்ளார்.
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என ஜெயலலிதாதன் தோழி சசிகலாவுடன் பல கோவில்களுக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகிறார்.
தமிழக கோவில்களுக்குச் சென்று கொண்டிருந்த நிலையில், எல்லை தாண்டி,சனிக்கிழமை ஜெயலலிதா தன் தோழி சசிகலாவுடன், கர்நாடக மாநிலம் மைசூரில்இருக்கும் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று சாமுண்டீஸ்வரி அம்மனைபிரார்த்தனை செய்தார்.
ஜெயலலிதாவும், சசிகலாவும் சுமார் 40 நிமிடம் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதன்பின் ஜெயலலிதா ரூ 4 லட்சம் மதிப்புள்ள நகைகளை அம்மனுக்கு காணிக்கையாககொடுத்தார்.












Click it and Unblock the Notifications