தீவிரவாதிகள் தாக்குதலில் 21 பேர் சாவு
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், பாகிஸ்தான் ஆதரவு லஸ்கர் ஈ தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 21 பேர் செவ்வாய்க்கிழமை நடந்தபல்வேறு மோதல்களில் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ஜம்முவிலிருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் சூரன் ஆறு பாயும் இடத்தில் உள்ளது சூரன்கோட்டை. இங்கு அதிக அளவுதீவிரவாதிகள் ஆக்கிரமிப்பு உள்ளது. இங்கு போலீஸாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 9 தீவிரவாதிகள், 2 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் 9 பேரும் லஸ்கார் ஈ தொய்பா மற்றும் அல் பாதர் முஜாஹிதின் தீவிரவாத அமைப்புக்களைச்சேர்ந்தவர்கள். கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 2 பேர் ஹாமாஸ் குல் மற்றும் ஒஸாமா குல் என தெரிய வந்துள்ளது.
சபாபோரா பகுதியில் மத்திய புறக்காவல் படை போலீஸாரும், ரிசர்வ் போலீஸ் படையும் சேர்ந்து நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர். இந்தத் துப்பாக்கிச் சண்டையின் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவரும் கொல்லப்பட்டார்.
ஸ்ரீநகர் மாவட்டத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாரமுல்லாவையடுத்துள்ள தார்ஸூ என்ற இடத்தில் போலீஸாருக்கும்,தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த போலீஸ் ஒருவரும், அடையாளம் தெரியாத நபர் ஒருவரும்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர் - பாரமுல்லா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வேன் மீது போலீஸார் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.பாரமுல்லா மாவட்டத்தில் தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். அதே பகுதியிலிருந்து அடாையளம் தெரியாத சிறுவனின் பிணம்கண்டெடுக்கப்பட்டது என்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications